சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ஞாபக சக்தி பெருக குழந்தைகளுக்கு கொடுங்க

கீரை வகைகளில் நிறைய இருந்தாலும் ஒவ்வொரு கீரையின் பயன்கள் என்னவென்று அறிந்து அதை சமைத்து உண்ண வேண்டும்.

  • கீரை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரைக் கீரை மிகவும் நல்லது.
  • ஞாபக சக்தி பெருகும்.

வல்லாரைக் கீரையை எங்கு பார்த்தாலும் விடவேண்டாம். ஒருசில கீரை எப்படி சமைப்பது என்று தெரியாமலே அதை ஒதுக்கி விடுகிறோம். வல்லாரைக் கீரை துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

வல்லாரைக் கீரை துவையல்

தேவையான பொருட்கள்

ஒரு கட்டு வல்லாரைக் கீரையை நுனியில் உள்ள இலைகளை மட்டும் எடுத்து கழுவி ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். அரை மூடித் தேங்காய் துருவல், வெங்காயம் 5, பூண்டு 3, இரண்டு ஸ்பூன் உளுந்து, வரமிளகாய் 8, புளி ஒரு சிறிய உருண்டை, எண்ணெய், கடுகு, உப்பு தேவையான அளவு.

செய்முறை விளக்கம்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு தாளித்து வரமிளகாய், பூண்டு, வெங்காயம், வல்லாரை ஒவ்வொன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி உப்பு சேர்த்து கடைசியாக தேங்காய் சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்தெடுக்கவும். வல்லாரை துவையல் சாப்பாட்டிற்கு அருமையாக இருக்கும். நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடவும். ஞாபக சக்தி பெருக குழந்தைகளுக்கு கொடுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *