யூபிஎஸ்சி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
யுபிஎஸ்சி தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கும் தேர்வர்களுக்கான நற்செய்தி, இத்தனை நாட்கள் கொரோனா காரணமாகத் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டு இருந்தன. செப்டம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் வரும் அக்டோபர் நான்காம் தேதி யுபிஎஸ்சி தேர்வு முதல் நிலை தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மத்திய அரசின் அதிகாரபூர்வமான upsc.gov.in தளத்தில் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மத்திய ஆட்சிப் பணி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வானது முதல்நிலை முக்கியத் தேர்வு மற்றும் நேரடி தேர்வு ஆகிய மூன்று நிலைகளைக் கொண்டது.
யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் ஆயில் ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி தேர்ச்சி பெறுபவர்கள் பணியில் அமர்த்துப்படுவார்கள்.
யுபிஎஸ்சி தேர்வானது மூன்று நிலை தேர்வினை கொண்டது ஆகும். முதல்நிலைத் தேர்வில் 2 தாள்கள் உள்ளன. ஒரே நாளில் காலை மற்றும் நண்பகல் என்று இருவேளை நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவு தாளாக ஜிஎஸ் இருக்கும் மற்றும் இரண்டாம் தாளில் காம்பிரிகென்சன்சன், ஆப்டிடியூட் ஆகியவை அடங்கிய தேர்வானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாடு முழுவதும் இருந்து லட்சக் கணக்கானோர் இத்தேர்வுக்கு பங்கு பெறுவார்கள். ஒவ்வொரு தாளுக்கும் 200 மதிப்பெண்கள் உண்டு. மேலும் இரண்டு விடைகள் தவறு எனில் ஒரு சரியான கேள்விக்கான பதில் மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்தியாவில் ஐஏஎஸ் ஐபிஎஸ் படிக்க வேண்டுமென்று இளைஞர்கள் பெரும் கனவுடன் இருந்த படித்துத் தேர்வில் வெற்றி பெற்று நாட்டு மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றனர்.
முதனிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின்ஸ் தேர்வுக்கு 9 பேப்பர்கள் கொண்டது. இவற்றில் இரண்டு விருப்பப் பாடங்கள் ஒவ்வொன்றும் தாள்-1 கால் 2 மற்றும் கட்டுரைகள் தாள் அதனுடன் பொது அறிவு தாள்கள் ஆகியவை அடங்கிய 9 தாள்கள் முக்கிய தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அடுத்து இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் நேரடி தேர்வு மதிப்பெண்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள் அவரவர் மதி பணியிடங்களுக்கு ஏற்ப பயிற்சி பெற்று அதன் பின்பு அவர்களுடைய மதிபெண்களுக்கேற்ப பணிகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.