கையில் என்றும் காசு சேர நெற்றியில் வைக்கும் குங்குமத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்கள்
குங்குமம் என்பது மங்களகரம் நிறைந்த சக்தி வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. எந்த ஒரு சுப காரியத்திலும் குங்குமம் முதல் இடத்தை பிடிக்கும் குங்குமத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதனால் தான் குங்குமத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து சுப நிகழ்வுகளிலும் முதன்மைப்படுத்தி வைக்கின்றனர். முக்கியமாக குங்குமம் என்பது பெண்களின் வாழ்வோடு இணைந்த ஒரு பொருளாக உள்ளது. அம்மனுக்கே உரிய குங்குமம் பெண்களின் நெற்றியில் வைக்கும் பொழுது மேலும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு கவசமாக மாறுகிறது.
சுப காரியங்களுக்காக வெளியில் பயணம் செய்வோர் நெற்றியில் குங்குமம் என்று சொல்லும் பொழுது உங்களுக்கு ஒரு பாசிட்டிவான உணர்வு உண்டாகிறது. சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளும் பொழுது கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கையாக கருதப்படுகிறது. மேலும் கணவருக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து அவரை வெளிக்கொண்டு வந்து எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் பாதுகாக்கும் கவசமாக உள்ளது. வீட்டின் வாசல் படியில் குங்குமம் தடவிய எலுமிச்சம் பழத்தை வைக்கும் பொழுது கெட்ட சக்திகள் எதுவும் வீட்டின் உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்துகிறது. மேலும் வீட்டில் பாசிட்டிவான உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துகிறது.
இவ்வளவு மகத்துவம் நிறைந்த குங்குமத்தை பெண்கள் நெற்றியில் இடும்பொழுது இதனுடன் இன்னொரு பொருளையும் சேர்த்து வைத்தால் இன்னும் பல நன்மைகள் உங்களைத் தேடி வரும். வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கி மன அமைதி கிடைக்கும். கடன் தொல்லை ,பண பிரச்சனை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ வழிவகுக்கும் உங்கள் கையில் பணம் இருக்கும்.
தினந்தோறும் நெற்றியில் வைக்கும் குங்குமத்துடன் சிறிது பச்சை கற்பூரத்தை கலந்து வைத்து வர நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தினமும் பச்சை கற்பூரம் கலந்து வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஒரு சிறிய அளவு பச்சை கற்பூரத்தை குங்குமத்தில் கலந்து அந்த குங்குமத்தை தினமும் வைத்து வர வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் குறைந்து செல்வ வளம் பொங்கும். 48 நாட்கள் தொடர்ந்து பச்சை கற்பூரம் கலந்த குங்குமத்தை பெண்கள் நெற்றியில் வைத்து வர உங்கள் கையில் காசு வந்து சேரும் வித்தியாசத்தை நீங்களே கண்கூட உணர்வீர்கள்.