கொரோனில் மருந்தைப் பற்றி பதஞ்சலி நிறுவனத்தின் பகிரங்க உண்மைகள்
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் எம்.டி ஆச்சார்யா பால்கிருஷ்ணா கொரோனா நோயாளிகளை ஆயுர்வேத மருந்தான ‘கொரோனில் மற்றும் ஸ்வாசரி’ கொண்டு குணப்படுத்த முடியும் என கடந்த 23ஆம் தேதி அறிக்கை விடுத்தனர். வெறும் 3 நாட்கள் முதல் 14 நாட்களுக்குள் குணப்படுத்தலாம் எனவும் விளம்பரப் படுத்தினர்.
பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் கொரோனா நோயாளிகளை 100% குணப்படுத்தும் மருந்தை தெரிவித்ததை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பல்ராம் ஜெகத் என்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். பாபா ராம்தேவ் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரோடு இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஆச்சாரியா பாலகிருஷ்ணன் மூத்த அறிவியலாளர் அனுராக் வர்ஷ்னே ஆகியோரின் மீதும் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பதஞ்சலியின் மருத்துவ கண்டுபிடிப்பிற்கு பின் பல மக்கள் பதஞ்சலி பொருட்களை தன் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
பதஞ்சலி நிறுவனத்தின் வாதம்
ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக்பீத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் சோதிக்கப்பட்டு 100% குணமடைந்த பின்னரே இதனை வெளியிட்டதாக கூறுகின்றனர். உயிரிழப்பு 0%, குணப்படுத்துவது 100% என்பதை அவர்கள் நடத்திய பரிசோதனையால் குறிப்பிட்டுள்ளனர். 6 நாட்களில் 69% பாதிக்கப்பட்ட நோயாளிகளை இந்த மருந்தை கொண்டு குணமடைய வைத்துள்ளனர்.
கொரோனாவில் வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள இறுதிக்கட்ட நோயாளிகளை குணப்படுத்தும் முயற்சியில் ஆராய்ச்சியை வழி நடத்திக் கொண்டு வருகிறது இந்த நிறுவனம்.
ஆராய்ச்சியின் விவரங்களை பகிர்ந்த பதஞ்சலி நிறுவனம் தன்னுடைய சோதனை மையத்தில் உள்ள கொரோனா நோயாளிகளை ‘கொரோனில் மற்றும் ஸ்வாசரி’ கொண்டு குணப்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தோமே தவிர நாங்கள் வெளியிட்ட மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் குணப்படுத்தும் என்று சொல்லவே இல்லை என்று பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சாரிய பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அப்போ கொரோனாக்கு மருந்து இல்லையா!
கோவிட் 19 கிட் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைக்கு தேவையான பல போஷாக்கு லேகியம் மருந்து போன்றவற்றை தெரிவித்த இந்த நிறுவனம் தற்போது இவ்வாறு கூறுவது மக்களிடையே நம்பிக்கை இழக்கக் கூடியதாக உள்ளது.