வந்தாச்சு தீபாவளி….. எடுக்க வேண்டாமா புதுத்துணி???? 2021 தீபாவளி கலெக்சன்ஸ்
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான் தீபாவளிக்கு நாம் வாங்கும் உடைகள்,அலங்காரப் பொருட்கள் மற்றும் மற்ற வீட்டு பொருட்கள் கார் பைக் போன்றவை முக்கியத்துவமாக வாங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும் .தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பு நவராத்திரி தொடங்குகின்றது தற்போது இந்த நவராத்திரிக்கும் தமிழ்நாட்டில் மவுசு அதிகரித்து வருகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. வாங்க மக்களே …..இந்தப் பண்டிகை காலங்களில் புதிதாக பேஷன் உலகை வலம்வரும் உடைகளை பார்ப்போம்
ஆள் பாதி ஆடை பாதி
இன்றைய காலகட்டத்தில் ஆள் பாதி ஆடை பாதி என்பதுதான் பெருமளவில் பிரசித்தம் பெற்று வருகின்றது. அந்த வகையில் உடைகளுக்கு ஆண்கள் பெண்கள் இருவருமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த காலத்தில் வலம்வரும் எத்னிக் ரக உடைகள் மற்றும் மேற்கத்திய உடைகள் மிகவும் பிரசித்திபெற்று காணப்படுகின்றது. அந்த வகையில் தற்போதைய ட்ரெண்டிங் பார்ப்போம்.
ஃபேஷன் ஸ்ட்ரைட் குர்த்தி
இன்றைய காலகட்டத்தில் ஸ்ட்ரைட் குர்த்தி அதிக அளவில் பிரபலமாகி அனைவரும் உடுத்தும் வகையில் இருக்கின்றது. நவநாகரீக காலத்தில் ஃபேஷன் குர்த்தி பேலசோவுடன் இணைந்து கலக்கி வருகின்றது. இது அனைத்து உடல் வடிவமைப்புக்கு ஏற்ற மாதிரி அமைந்திருக்கின்றது. நாம் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிய வேண்டும், ஆனால் அவை கனமாக இருக்க கூடாது என்றாள் நீண்ட குர்த்தி மிகுந்த ஏற்ற ஒன்றாக இருக்கும்.
எம்பிராய்டரி குர்த்தி பாலசோ
பண்டிகை காலங்களில் எம்பிராய்டரி குர்த்தி பாலசோவுடன் அணிவது மிகுந்த ஸ்டைலிஷாக ஒன்றாக இருக்கின்றது. இந்த பண்டிகை காலத்தில் நாம் அணியும் உடையானது அழகாக கொண்டாட்டமாக இருக்கும் பாலசோ ஜார்ஜெட்டி மற்றும் காட்டன் வலம் வருகின்றன. ஸ்டைலான சிம்பிளான ஒரு இந்த ஆடைகளை வாங்கலாம்.
இன்னும் அசத்தலான பேசன் ஆடைகளைப் பற்றி அடுத்தடுத்து சிலேட்டுகுச்சியில் பார்ப்போம்….