சினிமா

வந்துட்டாரு வந்துட்டாரு.. மீண்டும் டிரெண்டிங்கில் வந்துட்டாரு.

சூப்பர் ஸ்டார் ரஜினி எழுபதாவது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சினிமா துறையினரும், இவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவதாக உறுதியை தெரிவித்த பிறகு வாழ்த்துக்கள் குவிந்து வந்துள்ளன.

  • இவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
  • ரஜினி அரசியலுக்கு வருவதாக உறுதியை தெரிவித்த பிறகு வாழ்த்துக்கள் குவிந்து வந்துள்ளன.
  • திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளனர்.

நடிகர், நடிகை என ஆர்யா, சிவகார்த்திகேயன், மோகன்லால், ரூபிணி, ரோஜா, நிக்கி கல்யாணி போன்ற திரையுலக துறையினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : பிரசன்னாவின் வெற்றியை கொண்டாடிய திரை உலகம்

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு முதல் பல வெற்றிகளையும், நல்ல ஆரோக்கியத்தையும் பெற வேண்டுகிறேன் என ஹன்சிகா வாழ்த்து தெரிவித்துள்ளார். எளிமைகாகவும், கடின உழைப்புகாகவும் எப்போதும் வியக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி சார். நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கடவுள் எப்போதும் ஆசிர்வதிக்க வேண்டுமென அருண் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அன்புக்குரிய தலைவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை கடவுள் உங்களுக்கு ஆசீர்வதிக்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார். மேலும் தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், மலையாள நடிகர் நிவின் பாலி பலரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க : தமிழ் டீச்சரை பெருமைப் படுத்திய பிரியங்கா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *