ஃபேசன்வாழ்க்கை முறை

பிரபலமான கலாச்சார ஆடைகள்

பாரம்பரிய ஆடைகள் என்றாலே தமிழர்களுக்கு நினைவில் வருவது புடவை தான். கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு அணிகலனாக மாற்றியது தமிழர்கள் தான். புடவைகளை மற்ற மாநிலங்களில் முக்கியத்துவம் பெற்று இருந்தாலும், தமிழகத்து புடவை பல்வேறு வெரைட்டி கொண்டுள்ளன.

பட்டு, பருத்தி கலந்த புடவைகள்

பட்டு, பருத்தி கலந்த மான்செஸ்டர் சில்க் காட்டன் புடவைகள் என தென்னிந்தியாவில் அழைக்கப்படுகிறது. ஆடம்பரம் இல்லாத பட்டும், எளிமை இல்லாத பருத்தியும் கொண்டு பிரபலமான புடவை பெண்களால் உலகளவில் பெருமையாக பார்க்கப்படுவது.

அதிகமான கலெக்ஷனை கொண்ட புடவைகள்

தமிழகத்தின் அடையாளமாக கைத்தறி, காதி கிராப்ட் புடவைகள் உள்ளன. அதிகமான கலெக்ஷனை கொண்டது. உயர்வாக காண்பிக்கும் தோற்றத்தைப் பெற்றது. கைத்தறி புடவைகள் அரசாங்கம் சார்ந்தும் தயாரிக்கப்படுகிறது.

கலை வண்ணம் கொண்ட பார்டர்களில் தஞ்சாவூர் சிற்பக் கலைகள், புத்தர் முகங்கள் போன்ற, பல கலை சிறப்பைப் பெற்றது செட்டிநாடு புடவைகள். காரைக்குடி மக்கள் செய்யக்கூடிய புடவை தான் செட்டிநாடு புடவை.

ஜரிகை பார்டர் சேர்ந்து, டார்க் நிற மற்றும் வெளிர் நிறமான பார்டர்களை கொண்டுள்ள காட்டன் புடவைகள் மதுரை காட்டன்.

பாரம்பரிய புடவைகள்

கோவிலுக்கு செல்பவர்கள் தேர்ந்தெடுக்கும் பாரம்பரிய புடவைகளில் சுங்குடி புடவைகள் ஒன்று. பலவித வகைகளைக் கொண்ட சுங்குடி புடவை மதுரை பேமஸ்.

பட்டுப்போன்று அல்லாத பட்டை விட குறைந்த விலையில், முழு புடவையும் ஜரி கையாலே செய்யப்பட்டுள்ளது சின்னாளப்பட்டு. ஏழையின் பட்டுப்புடவை ஆக திகழ்கிறது.

ரிச்சான லுக்

இளம் பெண்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்ற ஜார்ஜெட் புடவை தோற்றத்தில் ஆடம்பரத்தையும், அணிவதற்கு சுலபமாகவும், ரிச்சான லுக்கை கொடுக்கும்.

பார்க்கவே முடியாத நிறங்களைக் கொண்ட வெயிட் லெஸ் புடவைகள் ஷிபான் புடவைகள்.

ஜரிகை பார்டர், செக்கு போன்ற கட்டம் போட்ட காட்டன் புடவைகளை மாசாக கொண்டது சேலத்து புடவைகள். பல வண்ண சாயங்களை புதுமையாக புகுத்திய சேலம் புடவைகள் நெசவாளர்களின் சிறப்பம்சம்.

கலாச்சாரத்திற்கு ஏற்ற புதுமை

தனித்துவமான டிசைனையும் அணிவதற்கு மிருதுவாக இருக்கக்கூடியது நெகமம் புடவைகள். பொள்ளாச்சியில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து தமிழகத்திற்கே தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இவை கிராமத்துப் பருத்திப் புடவைகள் ஆக நெகமம் புடவைகள் உள்ளன.

கண்ணாடி வேலைப்பாடுகளும், எம்ராய்டரி டிசைன்களும் கலாச்சாரத்திற்கு ஏற்ற புதுமையைப் புகுத்தி உள்ளனர். நெசவில் நேரத்திற்கு ஏற்ற உழைப்பையும், கற்பனைக்குரிய திறனையும் கொண்டுள்ளது டிசைனர் புடவைகள்.

இதேபோன்று காஞ்சிபுரம் சில்க் புடவைகள், ராசிபுரம் புடவைகள் உள்ளன. இவை திருமண காலங்களில் முன்னிலை வகிக்க கூடிய பட்டுப்புடவைகள். பாரம்பரிய புடவைகள் என்றாலே திருமணத்திற்கு தமிழக புடவைகள் தான் பேமஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *