தரமான தக்காளி முட்டை சாதம் சத்தா சாப்பிடுங்க!
குழந்தைகளுக்கு தினமும் முட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். தினமும் ஒரே மாதிரி முட்டையை கொடுப்பதற்கு பதிலாக, தக்காளி முட்டை சாதம் செய்து கொடுப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி முட்டை சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள் செய்முறையை பற்றி பார்க்கலாம்.
தக்காளி முட்டை சாதம்
தேவையான பொருட்கள்
தக்காளி-1 நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தாள் சிறிதளவு அறிந்து வைக்கவும். முட்டை 3, பூண்டு 7 பல் தோல் உரித்தது. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன், சோயா சாஸ் 2 ஸ்பூன், தக்காளி கெட்சப் 2 ஸ்பூன், வினிகர் இரண்டு ஸ்பூன், கொத்தமல்லி சிறிதளவு. உப்பு, எண்ணெய் தேவையான அளவு. உதிரியாக வடித்த சாதம் ஒரு கப்.
செய்முறை விளக்கம்
முட்டையை வேக வைத்து தனியாக தோலுரித்து எடுத்து வைத்து துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு வேக வைத்த சாதம், உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும்.
வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு கிளறி விட வேண்டும். கடைசியாக முட்டை துண்டுகளை சேர்த்து பிரட்டி எடுக்கவும். அடுப்பிலிருந்து இறக்கியதும் இந்த சாதத்தில் கொத்தமல்லி தூவி கிளறி சூடாக பரிமாறவும். சுவையான தக்காளி முட்டை சாதம் தயார்.