ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்

சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு உகந்த நாள் ஆகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் ஆவணி மாதம் 11 ஆம் தேதி சனிக்கிழமை 27.8.2022

திதி : இன்று பகல் 02.30 மணி வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

நட்சத்திரம் : இன்று இரவு 09.58 மணி வரை மகம். பின்னர் பூரம்.

நாமயோகம் : இன்று அதிகாலை 03.38 மணி வரை பரிகம். பின்னர் சிவம்.

கரணம் : இன்று அதிகாலை 01.56 மணி வரை சதுஷ்பாதம் . பின்னர் பிற்பகல் 02.30 மணி வரை நாகவம். பின்பு கிமிஸ்துக்கினம் .

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.04 மணி வரை மரணயோகம். பின்னர் இரவு 09:58 வரை அமிர்த யோகம். பின்பு சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை: 07.45 முதல் 08.45 மணி வரை
பகல் :12.15 முதல் 01.15 மணி வரை
மாலை: 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு: 09.30 முதல் 10.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 0 – ஜீவன்: 0

இன்றைய ராசிபலன்:

மேஷம்

மேஷ ராசியில் இருந்து ஐந்தாம் வீட்டில் சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நடக்கிறது. இன்று முழுவதும் சுபமான நாளாக இருக்கும். இன்று கல்வி மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவார்கள். குடும்பம் மற்றும் காதல் உறவு விஷயத்தில், நிதானம் கடைப்பிடிக்க வேண்டும், இல்லையெனில் சச்சரவுகள் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியை அனுபவிக்கும் நாளாக இருக்கும். இன்று வீட்டில் மற்றும் வேலையில் அற்புதமான சூழ்நிலை இருக்கும். இன்று நீங்கள் கடின உழைப்பால் அதிக பணம் பெறலாம். மாலையில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். தூரத்து உறவினருடன் உறவில் நெருக்கம் ஏற்படலாம். இன்றைக்கு வருவாயுடன் செலவுகளும் இருக்கும்.

மிதுனம்

பற்றாக்குறையால் இவற்றை தள்ளி வைப்பீர்கள் எனினும் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை. நன்றாக இருக்கும் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

கடகம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். அது தொடர்பான வைத்தியங்களை ஆரம்பிக்கலாம் ஒரு சிலருக்கு இடமாற்றம் பற்றிய சிந்தனை கள் அதிகமாக ஏற்படும். இவற்றில் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்

நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை அதிகமாக பெறுவார்கள். இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றியடைவீர்கள்.

கன்னி

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாக வாய்ப்பு உள்ளது குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

துலாம்

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஆன நிலையை அடைவார்கள். சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்கள் பேச்சிற்கு மரியாதை உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். தனவரவு உண்டாகும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தனுசு

மாணவர்களின் கல்வி நிலையில் சற்று கூடுதல் கவனம் தேவை. வெளிநாட்டு கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் .புதிய வேலைவாய்ப்புகளை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.

மகரம்

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு என்று ஒன்றுமில்லை. மூத்தவர்களுக்கு உடல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டு விலகும் என்பதால் உணவு சார்ந்த விஷயங்களில் இவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான காரியங்களை இன்று துவக்க வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவியிடையே பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் குடும்ப அமைதி நன்றாக இருக்கும்.

மீனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். உங்களுடைய கடின முயற்சிக்கு என்று பாராட்டுரைகள் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் பெறக்கூடிய நிலைகள் உண்டாகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *