இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
இன்றைய ராசிபலன்:
ரிஷபத்தில் ராகு, சிம்மத்தில் சந்திரன், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, சூரியன், மீனத்தில் புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்..
மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
நண்பர்களுக்கு நன்மைகள் விளையும் நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் பூர்வீக சொத்து தொடர்பான காரியங்கள் சற்று காலதாமதமாகும்.
ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறிது கால தாமதமாக வாய்ப்பு உள்ளது சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அதற்கான வாய்ப்பு உருவாகும்.
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் கோவிலுக்குச் செல்லுதல் ஆன்மீகப் பெரியவர்களே சந்தித்தல் அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுதல் போன்றவைகள் சிறப்பாக நடைபெறும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியது வரும் உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு கல்விக்காக அதிக கவனம் செலுத்த வேண்டியது வரும்.
கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவடைய இன்னும் காலதாமதமாகும் ஒரு சிலருக்கு உடல் ரீதியான தொல்லைகள் ஏற்படும் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும் வெற்றி கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை.
சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நண்பர்களுக்கு இன்றைய நாள் வெற்றி பெறக்கூடிய நாள் ஆகும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் சொந்த தொழில் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு என்று படிப்பிற்கான நேரம் ஒதுக்க முடியாமல் செல்லலாம் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
அன்பர்களே இந்த நாள் மன மகிழ்ச்சி தரக்கூடிய நாளாகும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள் புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும் பொருளாதார உதவிகள் கிடைக்கும் வங்கி தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும் குடும்பத்தில் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் சிரமப்படுவீர்கள் எனவே கணவன்-மனைவி ஒற்றுமை சற்று பிரச்சனைகளைக் கொடுத்தாலும் நன்மை தருவதாகவே இருக்கும்.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது உங்கள் கடின உழைப்பை நிர்வாகம் அங்கீகரிக்கும் பலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாளாகும். நீண்ட நாட்களாக வரவேண்டிய தன வரவு வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கும் வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது இவை தொடர்பான உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு இவை தொடர்பான மருத்துவ முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் கணவன்-மனைவி ஒற்றுமை மேம்படும்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாடாகும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் வழக்கு போன்றவற்றில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு புரட்சிகரமாக நடைபெறும் சொத்துக்கள் வாங்குவது காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.
மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் தொழில் முயற்சிகள் சற்று கால தாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும். புதிய கல்வி வாய்ப்புகள் தென்படும் கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள்: பிலவ வருடம் பங்குனி 3ஆம் தேதி மார்ச் 17, 2022, வியாழக்கிழமை
திதி: சதுர்த்தசி பகல் 01.30 மணி வரை அதன் பின் பவுர்ணமி திதி
நட்சத்திரம்: பூரம் இரவு 12.34 மணி வரை அதன் பின் உத்திரம்
யோகம்: சூலம் நாமயோகம்
கரணம் : வணிசை அதன் பின் பத்தரை
சித்தயோகம் இரவு 12.34 வரை அதன் பின் மரணயோகம்
நேத்திரம் 2 ஜீவன் 1
நல்ல நேரம்:
காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் : 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை
இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் : காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை :காலை 9-00 மணி முதல் 10-30 மணி வரை