ஆன்மிகம்ஜோதிடம்ஜோதிடம்தமிழகம்

இன்றைய (7.9.2023) ராசி பலன்கள்

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி உள்ளது என்பதை உங்கள் ராசியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் சுப காரியமாக முடிய, ஏதாவது ஒரு செயலை தொடங்க , பயணங்கள் மேற்கொள்ள ஏற்ற நாளாக உள்ளதா ஒரு செயலை செய்யலாமா வேண்டாமா என்பதை உங்கள் ராசிக்கு உண்டான பலனை பார்த்து முடிவு செய்யுங்கள் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இன்றைய (07-09-2023) ராசி பலன்கள்

மேஷம்

குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவருவாயில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆபரணங்களின் சேர்க்கை அதிகரிக்கும். எதிர்பாராத சில அறிமுகத்தின் மூலம் புதுமையான சூழல் அமையும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அஸ்வினி : அறிமுகம் ஏற்படும்.

பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : லாபம் உண்டாகும்.

ரிஷபம்

மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்திரமான சில விஷயங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பாகப் பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

கிருத்திகை : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

ரோகிணி : காரியங்கள் நிறைவேறும்.

மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்

உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். ஆடம்பர பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

திருவாதிரை : கவனம் வேண்டும்.

புனர்பூசம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.

கடகம்

சபை பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடு அதிகரிக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், மாற்றமும் உண்டாகும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : முதலீடு அதிகரிக்கும்.

பூசம் : அனுபவம் மேம்படும்.

ஆயில்யம் : கவலைகள் நீங்கும்.

சிம்மம்

விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிறமொழி சார்ந்த மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். தூர தேச பயணங்கள் ஈடேறும். அரசு வழியில் மறைமுகமான ஒத்துழைப்பு உண்டாகும். பரிசுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : மேன்மை உண்டாகும்.

பூரம் : ஆதாயம் ஏற்படும்.

உத்திரம் : பயணங்கள் ஈடேறும்.

கன்னி

ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வீட்டினை மனதிற்குப் பிடித்தவாறு மாற்றி அமைப்பீர்கள். செய்யும் முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

உத்திரம் : முடிவு கிடைக்கும்.

அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்

சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். பயணங்கள் தொடர்பான செயல்களில் காலதாமதம் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : கவனம் வேண்டும்.

சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.

விசாகம் : தாமதம் ஏற்படும்.

விருச்சிகம்

உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனைவியுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

விசாகம் : திறமை வெளிப்படும்.

அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கேட்டை : சுறுசுறுப்பான நாள்.

தனுசு

இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். புது வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த சாதகமான முடிவு கிடைக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மூலம் : தனவரவு கிடைக்கும்.

பூராடம் : நம்பிக்கை உண்டாகும்.

உத்திராடம் : லாபம் மேம்படும்.

மகரம்

வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசை உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.

திருவோணம் : சிக்கனத்துடன் செயல்படவும்.

அவிட்டம் : ஆசை உண்டாகும்.

கும்பம்

கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். இழுபறியான செயல்களைச் செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : புரிதல் உண்டாகும்.

சதயம் : ஆதாயம் ஏற்படும்.

பூரட்டாதி :ஆலோசனைகள் கிடைக்கும்.

மீனம்

புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

பூரட்டாதி : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

உத்திரட்டாதி : மனோபலம் உண்டாகும்.

ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *