ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ரிஷபத்தில் ராகு, துலாம் ராசியில் சந்திரன், கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, மீனத்தில் புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். ரியல் எஸ்டேட் கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை வாங்கக் கூடிய நாள்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நேயர்களுக்கு செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல முடிவுகள் கிடைக்கும் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும் இருப்பினும் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்றுவிடுவீர்கள் எதிர்கால வளர்ச்சிக்கு இது மிகுந்த உதவி செய்யக் கூடியதாக இருக்கும்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நாள் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு. சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்து தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நன்மையில் முடியும்

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பெண்களுக்கு முன்னேற்றமான நாளாகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இணக்கமான சூழ்நிலையைக் காண்பார்கள்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். வேலை தேடுபவர்களுக்கும் வெளிநாட்டு பிரயாணம் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் நாள் ஆகும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் பங்கு வர்த்தக துறை சுற்றுலாத்துறை உணவுத் துறை போன்றவற்றில் வேலைவாய்ப்பு பார்ப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் ஊதிய உயர்வு கிடைக்கும் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும் பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
வியாபாரம் சேவைத் தொழில் பத்திரிகைத் தொழில் கலைத்துறை வாகன தொழில் அரசு நிர்வாகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும். தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முற்பகலில் வெற்றி அடையும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும் பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். எதிர்பார்த்த பணவரவு உண்டு குடும்பத்தில் அமைதி நிலவும். பிற்பகலில் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
சுபகாரிய பேச்சு வார்த்தைகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது வெற்றிக்கனியை பெறும் வழியை எளிதாக்கும். வயோதிகர்களுக்குச் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் பங்குனி 7ஆம் தேதி மார்ச் 21, 2022, திங்கட்கிழமை

திதி: திருதியை காலை 08.20 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி

நட்சத்திரம்: சுவாதி இரவு 09.30 மணி வரை அதன் பின் விசாகம்

யோகம்: வியாகதம் நாமயோகம்

கரணம் : பத்தரை அதன் பின் பவம்

அமிர்தயோகம் இரவு 09.30 மணிவரை அதன் பின் மரணயோகம்

நேத்திரம் 2 ஜீவன் 1

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *