ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.

பஞ்சாங்கம்:

12 பிப்ரவரி மாதம் 2022 பிலவ வருடம் சனிக்கிழமை தை 30
வளர்பிறை
திதி :- இன்று மாலை 5.40 மணி வரை ஏகாதசி திதியை அதன்பின் துவாதசி திதி
நட்சத்திரம் : இன்று காலை 7.57 மணி வரை மிருகசீரிடம் பின்னர் திருவாதிரை

யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்

இன்றைய நல்ல நேரம் – காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
ராகு காலம் – காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை

குளிகை காலம் :- காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
இரவு : 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம்:- கிழக்கு

ராசிபலன்:

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும் ஒரு சிலருக்கு வாகன வகையில் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது இருந்தாலும் அதை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் அவர்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini

நேயர்களுக்கு பல நன்மைகள் தரக்கூடிய நல்ல நாள் ஆகும் நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் இன்று வசூலாகும் பல்வேறு சூழ்நிலைகளில் தடைபட்ட காரியங்கள் இன்று நிறைவேறும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அமைதியே நிலவும்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி உறவு உணர்ச்சிவசப்படக் கூடிய நிகழ்வுகள் உண்டாக வாய்ப்புள்ளது ஆகவே பொறுமையைக் அறிக்கை கொள்ளவும்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாகும் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும் அரசுத்துறையில் பணியாற்றும் வருபவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்துவரும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாகும் நீண்ட நாட்களாக வரவேண்டிய தனவரவு இன்று வசூலாக வாய்ப்புள்ளது குடும்பத்தில் அமைதி தவழும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நேயர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு உடல் நலத்தில் சிறிதளவு பிரச்சினை ஏற்பட்டாலும் பிறகு சரியாகிவிடும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
நேயர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் உள்ளது. அதன் பின்னர் சிறப்பாக இருக்கும். அதுவரை முக்கிய விஷயங்கள் செய்ய வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது ஆகவே கோபத்தை குறைத்துக் கொண்டு குணத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் அதனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் சுயதொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்த மகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்துவரும் பல நாட்களாக தாமதப்பட்டு வந்த பல காரியங்கள் இன்று நிறைவேறும் தனவரவு உண்டாகும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் இருந்தாலும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பொறுமையாக இருக்கவும். அவர்களுக்கு உடல் நலத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும் தனவரவு உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *