ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கமும் இராசிபலனும்

தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை குறிக்கும் விதமாக இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இன்று கருணை உள்ளம் கொண்ட அவரின் கொள்கைகளைப் பரப்புவோம் ..அகிம்சை வழியில் நடப்போம் …அன்பும் அறனும் இன்பமும் பெறுவோம்…

*இன்றைய (02-10-2021) நாள் எப்படி இருக்குனு நினைத்து கவலையே வேண்டாம்..இதோ உங்களுக்காக!!!!

இன்றைய  பஞ்சாங்கம்

2.10.2021*புரட்டாசி 16*சனிக்கிழமை*ஏகாதசிதிதி இரவு 11.11 வரை பின்பு தேய்பிறை துவாதசி.

நட்சத்திரம் – ஆயில்யம் பின்இரவு03.35 வரை பின்பு மகம்.

யோகம் – மரணயோகம் பின்இரவு 03.35 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

ஏகாதசி விரதம்.

பெருமாள்- நவகிரக வழிபாடு நல்லது.

கரிநாள்.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் –  மதியம் 01.30-03.00,

குளிகன் – காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் –  02.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் மன உளைச்சல்ஏற்படக்கூடும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில்பணிச்சுமை அதிகரிக்கலாம். பெரியமனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்குபெரிதும் உதவும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலைஅமோகமாக இருக்கும். குடும்பத்தில்பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே மனஸ்தாபங்கள் மறைந்து சந்தோஷம் கூடும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மூலம்எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம்உண்டாகும்.வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் கிட்டும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எதிர்பாராத திடீர்பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம்ஏற்படும். வேலையில் புதிய நபர் அறிமுகம்கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வரவை காட்டிலும்செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமைகுறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். நண்பர்களால் அனுகூலம்உண்டாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு புதிய தொழில் தொடங்கும்முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம்செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள்பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

துலாம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும்செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில்ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு எந்த ஒரு காரியத்தையும்துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்லமுன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு உழைப்பிற்கேற்ற பலன்கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள்ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.கவனத்துடன்செயல்பட வேண்டும்.

மகரம்

உங்களின் ராசிக்கு இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பரபொருட்கள் வாங்குவதில் ஆர்வம்அதிகரிக்கும். தொழில் வியாபாரரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம்சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில்இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள்செய்ய நேரிடும். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகுறையும்.

மேலும் படிக்க: திருப்புகழ் சுவாமிமலை பாடல் 203

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *