ஆன்மிகம்ஜோதிடம்பஞ்சாங்கம்

சுக்ர வார பஞ்சாங்கமும் இராசிபலனும்

இன்று சிறப்பு வாய்ந்த விஷ்ணுவிற்கு உகந்த மாதமான புரட்டாசி மாத மகாளய பட்சம் ஆகும். அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களும் நம் முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் கொடுத்து அவர்களை வணங்குவதது மிக நல்லது…

அம்மனுக்கு உகந்த நாளான இன்று நம் குல தெய்வதையும் ,விநாயகரையும் வழிபட்டு நம் பித்ருக்களை வணங்கி வருவது சிறப்பு….

இன்றைய (01-10-2021) நாள் உங்களின் நேரமும் ராசியும் எப்படி இருக்குனு பாருங்க!! இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்…

இன்றைய  பஞ்சாங்கம்

01.10.2021*புரட்டாசி 15*வெள்ளிக்கிழமை * தசமி திதி இரவு 11.04 வரை பின்பு தேய்பிறைஏகாதசி.

நட்சத்திரம்

பூசம் பின்இரவு 02.57 வரை பின்பு ஆயில்யம்.

யோகம் நாள் முழுவதும்மரணயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

அம்மன் வழிபாடு நல்லது.

புதியமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்–  மதியம் 03.00-04.30,

குளிகன் – காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் –  01.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள்நிறைவேறும்.உத்தியோகஸ்தர்கள் வேலையில்மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்துகொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளைதவிர்க்கலாம்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்லமுன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதியவாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வரவுக்கு மீறியசெலவுகள் ஏற்படும். உறவினர்களுடன்தேவையற்ற கருத்து வேறுபாடுகள்தோன்றும். நண்பர்கள் மூலம் உதவிகள்கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும்செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில்ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில்இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள்குறையும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும்சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமணமுயற்சிகளில் தாமத நிலை ஏற்படக்கூடும்.உடனிருப்பவர்களைஅனுசரித்து செல்வது நல்லது.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். நண்பர்களின்சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள்பூர்த்தியாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மனமகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியவர்களின்நன்மதிப்பை பெறுவீர்கள். நவீன பொருள் வாங்கும்வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள்நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில்அனுகூலம் கிட்டும். தொழிலில்கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டுலாபம் அடைவீர்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் சற்று குழப்பத்துடனும் மனஉளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள்ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தசெயலிலும் நிதானத்தை கடைபிடிக்கவேண்டும். வெளி நபர்களிடம் அதிகம்பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்

உங்களின் ராசிக்கு இல்லம் தேடி இனிய செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் எதிர்பாராதவகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால்  அனுகூலப் பலன்கள் கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் உங்களின் மதிப்பும்மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூடஎளிதில் செய்து முடிக்கும் துணிச்சல்உண்டாகும். திடீர்பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார ரீதியாகநெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகரீதியான பயணங்களால் அலைச்சல், உடல்அசதி ஏற்படும். தெய்வ வழிபாடு செய்வதுநல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *