Today panchangam and Rasipalan : இன்றைய நாளும் ராசியும் எப்படி இருக்கு ? (01.05.2024)
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (01.05.2024)
குரோதி வருடம் சித்திரை மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை 1.05.2024
திதி : இன்று அதிகாலை 03.10 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.42 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
நாமயோகம் : இன்று மாலை 05.40 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
கரணம் : இன்று அதிகாலை 03.10 வரை பவம். பின்னர் மாலை 02.10 வரை பாலவம். பிறகு கௌலவம் .
அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
சூலம்: வடக்கு.
பரிகாரம்: பால்.
இன்றைய ராசிபலன் (01.05.2024)
மேஷம் – காரியம் நிறைவேறும்
ரிஷபம் – மகிழ்ச்சியாக இருப்பார்
மிதுனம் – குழப்பமான நாள்
கடகம் – கருத்து வேறுபாடு
சிம்மம் – அனுசரித்து செல்லவும்
கன்னி – கனவு அதிகமாகும்
துலாம் – தடை விலகும்
விருச்சிகம் – பிரச்சனைக்கு தீர்வு
தனுசு – கலகலப்பான நாள்
மகரம் – மனக்கவலை விலகும்
கும்பம் – விரயம் ஏற்படும்
மீனம் – ஓய்வு எடுப்பர்