டிஎன்பிஎஸ்சிக்கான சிந்துவெளி நாகரிகம் வினா விடைகள் பகுதி -4
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக வாழ்வில் இலச்சியம் என்று ஒன்று இருக்கும் ..அதனை எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும் .. ஆனால் தனது இலக்கை அடையும் பாதைகளில் கடக்கும் இன்னல்களை பொருட்படுத்தாது தனது இலச்சியதை மட்டுமே நோக்கி பயணிப்பவன் தான் அனைத்தையும் சாதிக்க முடியும்..
விடா முயற்சி விஷ்வ ரூப வெற்றி ! என்பதை உணர்ந்து தினமும் இலக்கை அடைய முயற்சி செய்ய பயிற்சி எடுப்போம்… கனவுகளை நிஜமாக்குவோம் !!!
1. சிந்துவெளி நாகரிக காலத்தின் முக்கிய துறைமுகம்?
விடை : லோத்தல்
2. மொகஞ்சதாரோ கண்டறிந்தவர்?
விடை : R.D பானர்ஜி (1922)
3.இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குவது எது?
விடை: சிந்துவெளி நாகரிகம்
4. வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையர் சிலை எங்கு கண்டெக்கபட்டது?
விடை : மொகஞ்சதாரோ
5.எந்த நதி ஹரப்பாவில் உள்ள தானியக்கிடங்கிற்கு போக்குவரத்தாக இருந்தது?
விடை : இராவி
6.சிந்து நாகரீகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை : ஆர். இ மாட்டிமர் வீலர்
7. கீழ்கண்டவற்றை மாநிலங்களுடன் பொருத்துக
a) பனவாலி – குஜராத்
b) ஆலம்கீர் – ராஜஸ்தான்
c) டோலவிரா – உத்திரபிரதேசம்
d) காலிபங்கன் – ஹரியானா
விடை : 4,3,1,2
8. ஹரியூபூய – எதனுடன் அடையாளம் காணப்பட்டு உள்ளது?
விடை : ஹரப்பா
9. உலகிலேயே மிகப் பழமையான சிந்து சமவெளி நாகரிகத்தின் தடயங்கள் எங்கு கண்டறியப்பட்டுள்ளது ?
விடை : லர்கானா மாவட்டத்தில் உள்ள மொகஞ்சதாரோ
10. பின்வருவனவற்றுள் வீழ்சிக்கான காரணத்தை கூறியவர்களை சரியாக பொருத்துக
a) அந்நிய படையெடுப்பு – கென்னடி
b) நில நடுக்கம் – வீலர்
c) நோய்த்தொற்று – GF ஹோல்ஸ்
4) கக்கார் ஆறு திசை மாற்றம் – மார்ஷல்
விடை : 2, 4,1,3
11. நகரத்தின் மேல் பகுதி
விடை : சிட்டாடல்
12. திராவிட மொழியை ” திரிமிளகே” என்று கூறியவர்கள்?
விடை : யவனர்கள்
13. சிந்துவெளி மக்களின் முக்கிய ஏற்றமதிப் பொருட்கள் ?
விடை : கோதுமை, பார்லி
14. மிகப் பெரிய எண்ணிக்கையிலான ஹரப்பா நாகரிகத்தின் முத்திரைகள் எதனால் உருவாக்கப்பட்டது?
விடை : மென் கற்கள்
15 . சிந்துவெளி மக்கள் அறிந்திராத உலோகம் மற்றும் விலங்கு ?
விடை : இரும்பு மற்றும் குதிரை