டிஎன்பிஎஸ்சிக்கான பொதுத் தமிழ் ஆறாம் வகுப்பு வினா விடைகள்
நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி.அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள். கையில் பணமில்லையே..உடலில் வலுவில்லையே… உதவி செய்ய நண்பர்கள் இல்லையே … என்றெல்லாம் யோசித்த நேரத்தை வீணாக்காதே…எதற்கும் பயப்படாதே…தயங்காதே..! இலக்கை நோக்கி அடி எடுத்து வை. தொடர்ந்து முன்னேறு… சோதனைகள் விலகும்… பாதை தெளிவாகும்..நோக்கத்தை அடைந்தே தீருவாய்.. அதை யாராலும் தடுக்க முடியாது..
சுவாமி விவேகானந்தர்
1.”தமிழன் என் நெஞ்சில் இனிக்கும் இனிக்கும்” எனப் பாடியவர் ?
விடை : கவிஞர் காசி ஆனந்தன்
2. கனிச்சாரு எத்தனை தொகுதிகளாக உள்ளது ?
விடை : 8
3. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் “என்று பாடியவர் ?
விடை : பாரதியார்
4. கபிலர் என்னும் பெயரின் மாத்திரை அளவு
விடை : 3 1/2
5. “கால் முளைத்த கதைகள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை : எஸ்.இராமகிருஷ்ணன்
6.அரசு என்னும் சொல் இடம்பெற்றுள்ள நூல்?
விடை : திருக்குறள்
7.சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை,நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
விடை : நற்றிணை
8. சித்தம் என்பதன் பொருள்?
விடை : உள்ளம்
9. குழந்தையைக் கொஞ்சுவது போல கண்ணே மணியே! என்று செந்தமளுக்கு பெயர்கள் சூட்டி மகிழ்ந்தவர் யார்?
விடை : பாரதிதாசன்
10. நிருமித்த என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை : உருவாகிய
இது போன்ற வினா விடைகளை சிலேட்டு குச்சி தினமும் உங்களுடன் பகிர உள்ளது …படித்து பயன்பெறுங்கள்…..