கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

Tnpsc polity 2023 : போட்டித் தேர்வில் கட்டாயம் கேட்கும் இந்திய அரசியலமைப்பு வினாக்கள்

அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்ற மிகப்பெரும் கனவோடும், இலட்சியத்தோடும் தினமும் அதற்காக பயிற்சி செய்யும் நண்பர்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசியலமைப்பு பாடப்பிரிவில் இருந்து ஒரு சில முக்கிய வினா விடைகள்

முக்கிய வினா விடைகள்

1.அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக இருந்தவர் யார்?

விடை : டாக்டர் சச்சிதானந்த சின்ஹா

2. தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் எந்த நபருக்கு அனுப்பலாம்?

விடை : துணைக் குடியரசுத் தலைவர்

3. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த பகுதியில் சேர்க்கப்பட்டு உள்ளன?

விடை : அரசியலமைப்பு பகுதி 4

4. உயர் நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது ?

விடை : 62 ஆண்டுகள்

5. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம் பெற்றுள்ளன?

விடை : 47 வகைகள்

6. இந்திய திட்டக் குழுவின் தலைவர் யார்?

விடை : பிரதம அமைச்சர்

7. அரசியலமைப்பு கடமைகள் எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் வரையறுக்கப்படுகிறது?

விடை : 42 வது அரசியலமைப்பு திருத்தம்

8. ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் விதி?

விடை : விதி 370

9. எந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றம் லட்சத் தீவின் மீது சட்ட எல்லையை உடையது?

விடை : கேரளா

10. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் ?

விடை : நீதித்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *