Tnpsc tamil 2024 : போட்டித் தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
அரசு வேலையை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற லட்சியத்தை குறிக்கோளாக வைத்து அதனை நோக்கி பயணிக்கும் டிஎன்பிஎஸ்சி நண்பர்களுக்காக பொதுத்தமிழ் பாடப் பகுதிகள் இருந்து ஒரு சில முக்கிய வினா விடைகள் கொடுத்துள்ளோம். தினமும் சிறு சறு பகுதிகளாக படித்து தேர்வில் வெற்றி பெறுங்கள்.
முக்கிய வினா விடைகள்
திராவிட நாட்டின் வானம்பாடி என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : வாணிதாசன்
2. அவல் என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
விடை : மேடு
3. திரைக்கவி திலகம் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : அ . மருதகாசி
4. ஆதிரையன் வந்தான் என்பது எவ்வகைப் பெயர் ஆகும் ?
விடை : காலப்பெயர்
5. அவன் எழுத்தாளன் என்பது எவ்வகைத் தொடர் ஆகும் ?
விடை : பெயர் பயனிலைத் தொடர்