டிஎன்பிஎஸ்சி நண்பர்களுக்கு பொதுத் தமிழ் வினா விடை
டிஎன்பிஎஸ்சி நண்பர்கள் தங்கள் லட்சியத்தை அடைய சிலேட் குச்சியின் சார்பாக ஒரு சிறிய முயற்சி… சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் அதே போல் சிறிது சிறிதாக நீங்கள் தினமும் முயற்சி செய்யும் ஒரு காரியம் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை உங்களுக்கு தேடித் தரும்.
டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் வினா விடை
1. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
விடை : கனக சுப்புரத்தினம்
2. இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று பாடியவர் யார்?
விடை : திருநாவுக்கரசர்
3. அறிவியல் தமிழர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : பெ.நா அப்புசாமி
4. திருத்தொண்டர் தொகை பாடியவர் யார்?
விடை : சுந்தரர்
5. காட்டின் மூலவர் என்று அழைக்கப்படும் விலங்கு எது?
விடை : யானை
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சிக்கான சிந்துவெளி நாகரிகம் வினா விடைகள் பகுதி – 3
7. தென்னவன் பிரம்மராயர் எனப்படுபவர் யார்?
விடை : மாணிக்கவாசகர்
8. ஆண்டாளின் தந்தை யார்?
விடை : பெரியாழ்வார்
9. திருமுறைகளை தொகுத்தவர் யார்?
விடை : நம்பியாண்டார் நம்பி
10. திருமந்திரம் எத்தனை பாடல்களை உடையது?
விடை : 3000 பாடல்கள்
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சியில் நீதிப்பணிவேலைவாய்ப்பு வேண்டுமா