Tnpsc tamil : போட்டித் தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் மிக முக்கிய வினாக்கள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.என்கதை என்னும் நூலை எழுதியவர் யார்?
விடை : நாமக்கல் கவிஞர்
2. நாலடியாரை முப்பாலாகப் பகுத்தவர் யார் ?
விடை : தருமர்
3. அம்மை என்னும் வனப்பு வகையைச் சார்ந்த நூல் எது?
விடை : நான்மணிக்கடிகை
4. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?
விடை : ஜி. யு. போப்
5. சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை : நேமிநாதம்
6.நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என்று கூறியவர் யார்?
விடை : கல்யாணசுந்தரனார்
7. ஜீவனாம்சம் என்னும் நூலை எழுதியவர் யார்?
விடை : சி. சு செல்லப்பா
8. புத்தகச்சாலை எங்கும் புதுக்குநாள் எந்நாளோ என்று கூறியவர் யார் ?
விடை : பாரதிதாசன்
9. நாடக இயல் என்னும் நூலை எழுதியவர் யார்?
விடை : பரிதிமாற்கலைஞர்
10. பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு என்னும் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
விடை : பாஞ்சாலி சபதம்