கல்விகுரூப் 1குரூப் 2டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

Tnpsc Tamil 2023: போட்டித் தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்

டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 , குரூப் 2, குரூப் 4, விஏஓ தேர்வுகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்காக சிலேட்டு குச்சியின் சார்பாக பொதுத் தமிழ் பாடப்பிரிவில் இருந்து முக்கிய வினா விடைகள்

முக்கிய வினா விடைகள்

1.பாண்டியனுக்காக குதிரை வாங்க சென்றபோது திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பட்டவர் யார்?

விடை : மாணிக்கவாசகர்

2. மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

விடை : கவிமணி தேசிக விநாயகனார்

3. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் யார்?

விடை : பாரதிதாசன்

4. காவியா மாலையில் விளையாடினாள் என்பது எவ்வகை பெயர்ச்சொல்?

விடை : காலப்பெயர்

5. லைட் ஆப் ஆசியா என்னும் நூலை தழுவி எழுதப்பட்ட நூல் எது?

விடை : ஆசிய ஜோதி

6.தமிழின் முதல் காப்பியம் எது?

விடை : சிலப்பதிகாரம்

7. முற்போக்கு கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு எது?

விடை : 1939

8. பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை : லாலா லஜபதி ராய்

9. திருக்குறளின் முதல் பெயர் என்ன?

விடை : முப்பால்

10. தென்மொழி என்பது யாருடைய இதழ்?

விடை : பெருஞ்சித்திரனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *