Tnpsc Tamil 2023 : டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் 2023 முக்கிய வினா விடைகள்
அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்பதற்காக போட்டித் தேர்வுகளுக்காக போட்டி போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்காக சிலேட்டு குச்சியின் சார்பாக பொதுத் தமிழ் பாடப்பிரிவில் இருந்து ஒரு சில முக்கிய வினாக்கள் உங்களுக்காக…
முக்கிய வினா விடைகள்
1.கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று பாடியவர் யார்?
விடை : நாமக்கல் கவிஞர்
2. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு எனக் குறிப்பிடும் நூல் எது?
விடை : தொல்காப்பியம்
3. ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன என்று கூறியவர் யார்?
விடை : வல்லிக்கண்ணன்
4. முல்லைக்கோர் காடு போலும் முத்துக்கோர் கவலை போலும் என்ற உவமை மூலம் பாரட்டப்பெற்றவர் யார் ?
விடை : மறைமலையடிகளார்
5. இங்கிலாந்து ராணி காலையில் எழுந்ததும் படிக்கும் நூல் எது?
விடை : திருக்குறள்
6. முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ப்புற ஒன்றுடையாள் என்று பாடியவர் யார்?
விடை : பாரதியார்
7. திணை,பால், எண்,இடம் ஆகியவற்றை காட்டும் பகுபத உறுப்பு எது?
விடை : விகுதி
8. அலகிலா விளையாட்டு என்பதன் இலக்கணக் குறிப்பு?
விடை : ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
9. நல்கினார் என்பதன் வேர் சொல்?
விடை : நல்கு
10. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கூறியவர் யார்?
விடை : கண்ணதாசன்