Jallikattu bullsகல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி பொருளாதார குறிப்புகள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கான பொருளாதார குறிப்புகளை இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். பொது அறிவு பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரம் குறிப்புகள் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமாகின்றது.

இந்திய பொருளாதாரத்தில் திட்டமிடலுக்கு முன்பு செயல்பட்டு வந்த பொருளாதார நடவடிக்கைகள் இங்கு கொடுத்துள்ளோம்.

1934 ஆம் ஆண்டு பொருளாதார திட்டமிடல் விஸ்வேஸ்வரய்யா மூலம் தொடங்கப்பட்டது.

பொருளாதார திட்டமிடல் சுதந்திரத்திற்கு முன்பு 1938 ஆம் ஆண்டு இந்தியாவில் தேசிய திட்டக் குழு மூலம் ஜவகர்லால் நேருவை தலைமையாகக் கொண்டு துவங்கப்பட்டது.

1944 ஆம் ஆண்டு பம்பாய் திட்ட மூலம் எட்டு தொழிலாளர்கள் செயல்பாட்டில் இருந்தனர்

1945 எம் என்.ராய் அவர்கள் தலைமையில் மக்கள் திட்டம் திட்ட குழுவாக செயல்பட்டது.

சர்வோதயாதிட்டமானது ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் 1950 ஆம் ஆண்டு செயல்பட்டது.

1950, மார்ச் 15ஆம் தேதி கேசி.நியோகி மூவி தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தில் திட்ட குழு அரசியலமைப்பு சட்டபூர்வமான அமைப்பு கிடையாது என்று தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது .

இந்த பொருளாதார குறிப்புகளுடன் சேர்த்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொது அறிவு வினா விடைகள் பயிற்சி செய்வது தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும

இந்திய பொருளாதாரத்தில் திட்டக்குழு 1950 மார்ச் 15 கே சி நீயோகி அவர்கள் தலைமையில் பாராளுமன்ற தீர்மானத்தால் கொண்டுவரப்பட்டது. என்றாலும் இது இந்தியாவின் திட்ட குழுவின் பணிகள் ஆய்வு செய்து எல்லா மாநிலங்களுக்கும் வளங்களை சமமாக பிரித்துக் கொடுக்கும். மேலும் ஐந்தாண்டு திட்டங்கள் இறுதி செய்து தன் பணியை செய்யும்.நாட்டின் வளர்ச்சிக்கு இது வழிகாட்டியாக இருக்கும்.

ஐந்தாண்டு திட்டங்கள்

இந்தியா முதல் ஐந்தாண்டு திட்டத்தை 1951 முதல் 1956 வரை முதல் ஐந்தாண்டு திட்டமாக இந்தியாவில் செயல்பட்டது. விவசாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நீர்ப்பாசனம் முக்கியமாக விளங்கியது.

இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 1956 முதல் 1961 வரை

இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் கனரகத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மகலாநோபிஸ்

மூன்றாவது ஐந்து ஆண்டு திட்டம் 1961 முதல் 1966 வரை இயங்கியது இந்தியாவில் தற்சார்பு தன்னாக்க திறன் பெருகியிருந்த சமுதாயமாக உருவாக்கியிருந்தது.

1962 இந்திய சீன போர்

1965 இந்தியா பாகிஸ்தான் போர் இதன் காரணமாக பணவீக்கம் மேலும் பாதுகாப்புக்காக இத்திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றன.

நான்காவது ஐந்தாண்டு திட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு ஓராண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டது.

முதல் 1966 முதல் 1969 வரை ஓர் ஆண்டு திட்டங்கள் இருந்தது.

நான்காவது ஐந்தாண்டு திட்டம் 1969 முதல் 1974 வரை

நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் மக்களிடையே சமத்துவம் சமூக நீதி முக்கியத்துவம் தரப்பட்டது

நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் பசுமை புரட்சி என்ற வெண்மை புரட்சி அறிமுகமானது.

சமுதாயத்தில் பின்தங்கி வாழும் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஐந்தாவது திட்டம் 1974 முதல் 1979 வரை செயல்பட்டது. இது வறுமையை ஒழிக்க முக்கியத்துவம் கொடுத்தது இத்திட்டத்தில் கரிபி ஹட்டோ வறுமையை ஒழிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும்.

இதுபோன்று தொடர்ந்து நாம் பொருளாதார குறிப்புகளை அடுத்து வரும் பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம். தேர்வர்கள் படிக்கும் நேரம் மற்றும் மற்ற நேரங்களை கணக்கீடு செய்து விரைய நேரத்தை விவேகமாக பயன்படுத்தி கட்டுக்குள் இருந்தால் நேர மேலாண்மை மேம்பட்டு படிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு தேர்வில் வெற்றியும் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *