Tnpsc Tamil 2023: போட்டித் தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதை இலட்சியமாகக் கொண்டு அதற்கான முயற்சிகளை எடுத்து வரும் நண்பர்களுக்கு உதவும் வகையில் ஒரு சில முக்கிய வினா விடைகளை பார்ப்போம்.
முக்கிய வினா விடைகள்
1.மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
விடை : 1951
2. பாரதியார் சுயராஜ்ய நாளை கொண்டாடிய ஆண்டு ?
விடை : 1908
3. சிலம்பு செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : மா.பொ. சிவஞானம்
4. திராவிட சாஸ்திரி என்னும் சிறப்பு பட்டம் பெற்றவர் யார் ?
விடை : பரிதிமாற்கலைஞர்
5. ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தன் உறவு வேண்டும் எனப் பாடியவர் யார்?
விடை : இராமலிங்கம் அடிகள்
6. எளிய நடைகள் தமிழ் நூல்கள் எழுதிடவும் வேண்டும் இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் என பாடியவர் யார்?
விடை : பாரதிதாசன்
7. நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கி உள்ள மாநிலம்?
விடை : தமிழ்நாடு
8. தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடும் நூல் எது?
விடை : சிலப்பதிகாரம்
9. தென்தமிழ் தெய்வத்துப்பரணி என கலிங்கத்துப்பரணியை பாடியவர் யார் ?
விடை : ஒட்டக்கூத்தர்
10. கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார் ?
விடை : ராஜமார்த்தாண்டன்