செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

Job opportunity 2023 for Teachers: தமிழ்நாடு கல்வித் துறையில் 2222 காலிப்பணியிடங்கள்; ஆசிரியர் பணிக்கான அறிய வாய்ப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துணைப் பணிக்கான சிறப்பு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர், கல்வியாளர்கள் (BRTE) பணிகளுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 30.11.2023 கடைசி நாளாகும். எனவே விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆசிரியர் பணிக்கான இந்த அரிய வாய்ப்பை யாரும் தவறவிடாதீர்கள்.

காலிப்பணியிடங்கள்

பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) பதவிக்கு என மொத்தம் 2222 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை யாரும் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  • Directorate of School Education – 2171 பணியிடங்கள்
  • Directorate of MBC/DNC Welfare – 23 பணியிடங்கள்
  • Directorate of Adi- Dravidar Welfare – 16 பணியிடங்கள்
  • Directorate for Welfare of the Differently Abled – 12 பணியிடங்கள்

கல்வித் தகுதி

பட்டப்படிப்பு மற்றும் தொடக்கக் கல்வியில் 2 ஆண்டு டிப்ளமோ (அல்லது) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு மற்றும் கல்வியில் இளங்கலை (B.Ed.) பட்டம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது)

இளங்கலை தொடர்பாக அவ்வப்போது வெளியிடப்படும் NCTE (அங்கீகார விதிமுறைகள் மற்றும் நடைமுறை) விதிமுறைகளின்படி குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். (அல்லது)

இளங்கலை கல்வி (B.Ed.) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் மற்றும் தொடக்கக் கல்வியில் 4 ஆண்டு இளங்கலை (B.El.Ed.) அல்லது உயர்நிலை குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ( அல்லது)

4- ஆண்டு B.A./B.Sc.Ed  .அல்லது B.A.Ed./B.Sc.Ed (அல்லது) பட்டப்படிப்பு குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் மற்றும் B.Ed.,   மற்றும் ஆட்சேர்ப்பு செய்யப்படும் பாடங்கள் அல்லது மொழிகளுடன் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

பொது பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 1.7.2023 இன் படி 53 வயதாக இருக்க வேண்டும்.

பட்டியல் சாதிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், MBC/DNC மற்றும் DW ஆகிய அனைத்து சாதிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 1.7.2023 இன் படி 58 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் சம்பளம் அவரவர்களின் பதவி நிலையின் படி மாதம் ரூ.36400 முதல் ரூ.115700 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை மற்றும் தேர்வு கட்டணம்

# கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு
# எழுத்துத் தேர்வு
# சான்றிதழ் சரிபார்ப்பு

பொதுப் பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப கட்டணம் ரூ.600 ஆகும்.

SC, ST, SCA பிரிவினருக்கு விண்ணப் கட்டணம் ரூ.300 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை

தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கிளை கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று உங்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க கடைசி நாளான 30.11.2023 தேதிக்குள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதிகாரப்பூர்வ இணையதளம்

Download Notification and Application link

இந்த இணையதளத்தில் சென்று உங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *