இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
கனமழைக்கு பல மாவட்டங்களில் வாய்ப்புள்ளதாக இன்று வானிலை ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.
தமிழகம், ஆந்திரா, ஒடிசா, கடலோரப் பகுதிகளிலும், கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, கேரளா, மன்னார் வளைகுடா போன்ற இடங்களில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.