திருப்பாவை, திருவெம்பாவை 11 ஆம் நாம் பாடல்கள்
\
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி மார்கழியில் மேற்கொள்ளும் பாவை நோன்பால் பெண்கள் தங்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள். பெரியவர்களுக்கு முக்தி கிடைக்கும். மார்கழி மாதம் இறைவனுக்கென்று அதிகமான வழிபாடுகள் கொண்ட மாதாம் ஆகும்.
திருப்பாவை -11
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
இடையர் குலத்தில் பசு கன்றுகளை ஈன்றது பால் சுரக்கும் பசு கன்று குட்டி கொடுத்தது போக மீதம் இருப்பதை பெறுவார்கள், அவர்களே இடையர்கள் என்போம் அத்தகைய இடையகுல பெண்டீரே, நாக்கத்தின் கழுத்துக்கு நிகரான கழுத்து கொண்ட அழகிய பெண்ணே, இடையர் குலத்தில் தோன்றிய அழகிய பெண்ணே, மயிலின் சாயல் கொண்டவளே எழுந்திரு விழித்திரு!,
உன் வருகையை நோக்கி காத்திருக்கிறோம் வா அனைத்து நட்பு றவுகளையும் உன் உறவினர்களையும் அழைத்து அதோ அந்தக் கார் மேக கண்ணன் நாமங்கள் பாடு பெண்மையின் புனிதம் காப்பவள் நீ இப்படி தூங்கலாமா அசையாமல் பேசாமல் தூங்குகிறாய் எனக்கு என்ன கொடுக்கும் எழுந்து வா என்று பாடுகின்றார்.
திருவெம்பாவை – 11
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.
பாடல் விளக்கம்:
திருவம்பாவை பாடலில் மாணிக்கவாசகர் சிவபெருமானை நெருப்புக்கு நிகரானவர் என்றும், தூய்மையான செந்நிறம் கொண்வர் திருநீற்றீல் மூழ்கிய இசை பெருமானே!, உமையால் உன்னாமலை தாயார் சிற்றிடையைவர், அக்னி போல் கண்களை கொண்ட அன்னை தாயவளின் கணவரே, உமது அடியார்கள் குளத்தில் வளர்ந்து நிற்கும் பூக்களை தேடிவரும் வண்டுகள்போல உன் திருவடிகளை எண்ணிப் உன் நாமம் பாடுகின்றோம்!.
இந்த பாவை நோன்பை வழிவழியாக பின்பற்றி வருகின்றோம். நீ அறிவாய் தலைவா, என் தலைவனே! எம்மை காத்தருள வேண்டும் என்று திருவம்பாவை பாடலில் மாணிக்கவாசகர் பாடியுள்ளார். பாவை நோம்பு பெருமையானது யாகங்கள் பல செய்து பெற்ற பெயர் அனைத்தும் சிவபெருமான் திருவிளையாடல் பெறுவது போல காட்டப்பட்டிருக்கின்றன.