ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை பாடல் 17

திருவெம்பாவை பாடல்கள் சிவ பெருமானை தருசிக்க வர வேண்டியிருக்கும். சிவ பெருமானை அட சப்பரத்தில் அழைத்து வரும் பொழுது நாம் அவரை தரிசிக்கலாமே என்று சிவபக்தி குறித்து விளக்கியிருப்பார்.

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

பொருள்: தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.

மேலும் படிக்க : திருவெம்பாவை பாடல் 17

விளக்கம்: இறைவனைத் தேடி நாம் கோயிலுக்குச் செல்ல வேண்டியதில்லை. இதோ! அவனே வருகிறான் அழகிய சப்பரத்தில்! இப்போது கூடவா அவனைத் தரிசிக்க தயக்கம்! அவன் வருமுன் நீராடி உடல் சுத்தமாகி, நமசிவாய எனச் சொல்லி நின்றால், அவன் நமக்கு சேவகன் போல் சேவை செய்வான். வேறெதுவும் அவன் எதிர்பார்ப்பதில்லை என்பது இப்பாடல் சொல்லும் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *