இன்று திருக்கார்த்திகை கொண்டாட்டம்
இன்று கோலகாலமாய் திருக்கார்த்திகை திருவண்ணாமலையில் தொடங்கியது மக்கள் வெள்ளத்தில் விழாவானது கொண்டாடப்பட்டது. காலை முதல் அண்ணாமலையாரை வேண்டி மக்கள் விரதம் இருந்து வந்தனர். வீடுகளில் சுத்தம் செய்து காலை முதல் திருக்கார்த்திகைக்கு தயாராகி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
வீடுகளில் விளக்கு அலங்காரம் :
விளக்கு அலங்காரம் ஜொலிக்க மக்கள் திருக்கார்த்திகை நாளில் அகல் விளக்கை ஏற்றி மகிழந்தனர். விளக்குகள் வரிசையாக ஏற்றி வைத்து அனைவரும் கோவிலுக்கு சென்று வந்தனர். வண்ண வண்ண நிறங்களில் வீடுகளில் கோலமிட்டு கோலங்களுக்கு இடையே விளக்கு வைத்து மகிழ்வுடன் அண்ணாமலையாரை தரிசித்து ஒளி வெள்ளத்தில் ஒன்று கூடி கொண்டாடி மகிழந்தனர்.
கார்த்திகை மாத விளக்கு :
கார்த்திகை மாதத்தில் மாலை நேரத்தில் வீடுகளில் , சுற்றுப்புற கோவில்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்படும் முறையானது மூன்று நாட்கள் கொண்டாடப்படும். வீடுகள் மற்றும் கோவில்களில் விளக்குகள் ஒளி வெள்ளத்தில் மின்னும் கர்நாடகா ,ஆந்திரா மாநிலங்களில் இந்த மாதம் முழுமையும் விளக்குகளை வீட்டு வாசல்களில் ஏற்றி வைக்கப்படுவது வழக்கமாகும். திங்கள் கிழமைகளில் இன்னும் சிறப்பாக விளக்கேற்றி வைக்கப்படுகின்ற்து