ஆன்மிகம்ஆலோசனை

வரலட்சுமி விரதம் பூஜை விதிமுறைகள்

வரலட்சுமி விரதம் பூஜை விதிமுறைகள். ஒவ்வொரு வருடத்திலும் ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.

இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் அனைவரும் கடைப் பிடிக்கலாம். சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறவும். கன்னிப்பெண்கள் நல்ல கணவரை திருமணம் செய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டு இந்த விரதத்தை மேற்கொள்வார்கள்.

மேலும் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கு இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இவ்விரதத்தை மேற்கொள்பவர்கள் முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி, பச்சரிசி மாவு கோலம் வாசலில் போட்டு, வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும்.

வீட்டின் பூஜை அறையில் சாமி படங்களை சுத்தம் செய்து சந்தனம் பொட்டு வைத்து, விளக்குகளையும் சுத்தம் செய்து சந்தனம் பொட்டு வைத்து முந்தைய நாளே இவற்றை முடித்து வைக்கவேண்டும்.

மறுநாள் அதிகாலை வரலட்சுமி விரதத்தின் அன்று அதிகாலை எழுந்தவுடன் விரதத்தை தொடங்க வேண்டும். கலசம் வைத்து கும்பிடுபவர்கள் கலசத்திற்கு அலங்காரம் செய்து வைத்து வழிபடலாம்.

கலசம் வைக்க முடியாதவர்கள் வீட்டில் உள்ள அம்மன் படங்களுக்கு எளிமையாக உங்களால் முடிந்த அலங்காரங்களை செய்து பழங்கள், தாம்பூலம் படைத்து அம்மன் பாடல்களைப் பாராயணம் செய்து வழிபடலாம்.

உங்கள் வசதிக்கு ஏற்ப மனதார வேண்டிக்கொண்டு செய்யும் பூஜைகளை ஏற்று மனமிரங்கி வருபவள் அன்னை. எனவே இந்த காலகட்டத்தில் கோவில்களுக்கு செல்ல முடியாத காரணத்தால், அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, மனதார வேண்டி பூஜை செய்து, மாங்கல்ய கயிறு வைத்து பூஜித்து அந்த கயிறை அன்றைய தினம் குரு ஓரையில் மாற்றிக் கொள்ளலாம்.

முடிந்தவர்கள் 3, 5 என்ற எண்ணில் தாம்பூலம் வைத்து அருகில் இருப்பவர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம். இந்த பிரசாதத்தை பெறுபவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *