அழகு குறிப்புகள்வாழ்க்கை முறை

ஃபிரஸா இருக்க இத செய்ங்க..!!

தலை முதல் பாதம் வரை உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் களைப்படைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. களைத்த பகுதிகளுக்கு புத்துணர்வு அளிக்க சில யோசனைகள் பதி விடுகிறேன். களைப்பு என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. தினமும் அங்கும், இங்கும் வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்தால், நம் உடல் சருமம் களைத்திருக்கும்.

களைத்த சருமத்தை

எப்படிப் பராமரிக்கலாம். எலுமிச்சை பழ சாறு, கிளிசரின் ஆகிய மூன்றும் கலந்த கலவையை உடல் முழுவதும் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்தால் சருமம் துர்நாற்றமின்றி களைப்பு நீங்கி அழகு பெறும்.

கோதுமை தவிடு சிறிது, கடலை மாவு சிறிது, பால் ஆகியவற்றை கலந்து முகம் உட்பட உடல் முழுவதும் தேய்த்து கழுவ சருமத்தின் இறந்த செல்கள் அகற்றப் பட்டு புதுப்பொலிவு பெறும். அரை கப் துருவிய கேரட் ஒரு ஸ்பூன், பாலாடை இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற விடுங்கள்.

பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் நன்கு கனிந்த வாழைப்பழத்துடன் சிறிது தேன், கலந்து பிசைந்து காலை வேளைகளில் முகத்தில் தடவ முகம் புத்துணர்ச்சி பெறும்.

கண்கள் களைத்து விட்டதா

கம்ப்யூட்டரில் வேலை செய்வதால் அதிக நேரம் பார்ப்பதால் சில நேரங்களில் கண் களைத்துப் போய் விடும். அளவுக்கு அதிகமாகப் மொபைல் பார்ப்பது தவிர்த்து விடுங்கள். அதிகமாக காட்டும் போது ஒரு தடவைக்கு மேல் இட வேண்டாம்.

வெள்ளரிக்காயை துருவி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாறை பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்து விடுங்கள். உபயோகப்படுத்திய பிறகு கண்களுக்கு மேல் வைத்தபடி சிறிது நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இது கண்களை குளிர்ச்சியாக்கும்.

கண்களுக்கு அடியில் உள்ள கருவளையங்களை நீக்கி பிரகாசமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது நம் கண்களுக்கு இதையெல்லாம் செய்ய வேண்டும்.

கால்களுக்கு

தினமும் கால்கள் களைத்துப் போகாம இருக்க, களைத்த கால்களுக்கு பாதாம் எண்ணெய், நீலகிரி தைலம், இரண்டும் கலந்து கால்களை மென்மையாக மசாஜ் செய்தால் களைப்பு நீங்கி மிருதுவாகும். தரையில் நேராக மல்லாந்து படுக்க வேண்டும். பாதங்கள் தரையை தொட்டபடி இருக்க வேண்டும்.

பிறகு ஒவ்வொரு காலாக வளைக்காமல் நேராக மேல் நோக்கி தூக்கி இரண்டு கால்களையும் இப்படி மாற்றி மாற்றிச் செய்வதால் கால்களின் களைப்பு நீங்கி புத்துணர்வு பெறுவதை உணர முடியும்.

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கைப்பிடி உப்பு, சிறிது எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் கலந்து அதிகாலை 15 நிமிடங்கள் ஊற வைப்பதால் பாதங்களின் வலியையும் குறைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *