அழகு குறிப்புகள்

சரும பொலிவுக்கு வீட்டிலேயே கற்றாழையில் சீரம் தயாரிக்கலாம்..!

கணினி யுகத்தில் வாழும்  நாம் நமது உடல், உள்ள பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல்   தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெருகி வருகின்றது. என்னதான் வியாபார உலகென்றாலும் வீட்டிலே தங்களை அழகுப் படுத்தி பராமரிக்க பெண்கள் விரும்புவது என்பது எப்பொழுதுமுள்ள டிரெண்டு தான்.

எவ்வளவுதான் மாடலிங் உலகில் வாழ்ந்தாலும் நாம் முழுமையாக நம்பி வாங்கும் அத்தனை அழகு பராமரிப்பு சாதனங்களிலும் இயற்கை பொருட்களின் கலவை இருப்பதால் தான் அதன் வணிகம் பெருகின்றது.

அதனால் முகப் பொலிவு சாதனங்கள் வாங்கினாலும் அவற்றில் நாம் நிரந்திர அழகினை பெற முடியாது.  நம்மை நாமே பராமரிக்க  பல வழிகளில் முயன்று வருவோம் அந்த வகையில்  நாம் நிறைய  மாற்றங்களை சருமத்தில் உருவாக்குவோம்.  இங்கே வீட்டிலேயே பெண்கள் தங்கள் அழகை பராமரித்துகொள்ள குறிப்புகள் கொடுத்துள்ளோம் அதனை படித்து பயன்படுத்திப் அழகுக்கு அழகு சேர்க்கவும்.

சரும அழகிற்கு வீட்டிலேயே சீரம்:

சரும பொலிவு, பிக்மெண்டேசன் குறைத்தல் அத்துடன் சரும பளபளப்புடன் கூடிய உயிர்ப்பினை தொடர்ந்து பராமரிக்க நாம் வீட்டிலேயே சில  தீர்வுகளை கையாள்வது வழக்கமாகும். அந்த வகையில் உங்களுக்கு சிலேட் குச்சி வீட்டிலேயே கற்றாழையை வைத்து   சீரம் தயாரிக்க  கற்றுக் கொடுக்கின்றது. 

வீட்டிலேயே சீரம் தயாரித்து உங்களை நீங்களே அழகு படுத்துங்கள் பெண்களே,  அதிகபடியான செலவுகள், பார்லர் செல்வதை குறைத்து நம் அழகை நாமே பராமரிக்கலாம். வீட்டிலே நாம் செய்யும் சீரமானது சருமத்தில் பிக்மெண்டேசன் குறைக்கும், சருமம் பொலிவு பெறுவதுடன்  சருமம் உயிர்ப்புடன் ஆரோக்கியமாக இருக்கும மேலும் வீட்டிலேயே அதனை தயாரிப்பதால் அதன் தனித்தன்மையை நம்மால் எளிதாக உணர முடியும் அதிக பொருட் செலவும் ஆகாது. தேவையான பொருட்கள் குறித்தும் அதனை தரமானதாக வாங்கும் முறைமைகள் குறித்தும் இந்தப் பதிவு தெரிந்து கொள்ள உதவும்.

சீரம் செய்ய தேவையான பொருட்கள்:

வீட்டிலேயே சீரம் செய்ய  தேவையான பொருள்கள் கற்றாழை, பாதாம் எண்ணெய்,  தேங்காய் எண்ணெய், ரோஸ் வாட்டர், வைட்டமின் ‘இ’ மாத்திரைகள்

செய்முறை: 

ஒரு சிறிய கிண்ணத்தில் கற்றாழை ஒரு ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன், பாதாம் ஒரு ஸ்பூன்,  தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர்   ஒன்றரை ஸ்பூன் மற்றும்  வைட்டமின் ‘இ’ மாத்திரைகள்   சேர்த்து நன்றாக கலந்து வைத்து ஒரு காற்றுப்புகா  சிறிய பாக்ஸில் வைத்து தினமும் இரவு தூங்கும் முன் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். காலையில் முகத்தை தண்ணீரால் துடைத்து எடுக்கவும். இக்கலவையை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இயற்கையான அழகும், சரும பொலிவும் எளிதாக கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் பிக்மெண்டேசன் எடுக்க உதவும். பாதம் எண்ணெய் சருமத்தை பொலிவுறச் செய்யும். வைட்டமின் ‘இ’ மாத்திரை சரும பொலிவு மற்றும் கிளியர் ஸ்கின், பிக் மெண்டேசன் நீக்க உதவும்

ஆலோவீரா: 


ஆலோவீரா என்னும் கற்றாழை சருமத்தை ஆரோக்கியத்துடன்  வைத்து கொள்ள உதவுகின்றது. இயற்கையான குணநலங்கள் கொண்டது. கற்றாழை   சரும ஆரோக்கித்திற்கான மூலிகை  குணங்கள் நிறைந்தது. இது எளிதாக வீட்டிலேயே வளர கூடியது. சருமத்தை அலர்ஜி, வெயில் மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து காக்க உதவுகின்றது.  கற்றாழையின்  பல்வேறு பயன்கள்  படிப்பதைவிட பயன்படுத்தும் போது மட்டுமே புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *