நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிங்க தேர்வை வெல்லுங்கள்!
டிசம்பர் 20 உலக ஒற்றுமை தினமாக பின்பற்றப்படுகின்றது.
டெல்லியில் பத்து பதினைந்து வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டினை பயன்படுத்த தடை விதித்துள்ளது உத்தநீதிமன்றம்.
விவசாயிகளின் வருமானத்தை 2022 இருமடங்காக அரசு திட்டங்களை அறிவிக்க உள்ளது.
2018 ஆம் ஆண்டு வணிகம் தொடர்பான முன்னேற்ற நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படும் நாடுகளில் 23வது இடம் பிடித்துள்ளது. மொத்தம் 77 நாடுகளை பட்டியலிட்டுள்ளனர்.
வறுமை பெருகி காணப்படும் நாடுகளின் பட்டியல் குறியீட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா 53 வது இடம் பிடித்துள்ளது இவற்றில் மொத்தம் 105 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் இரண்டு ஆய்வு தொழில்நுட்ப மையங்களை உருவாக்க மத்திய அரசு ஜம்மு மற்றும் திரிபுராவின் அகர்தலா பகுதிகளை தேர்வு செய்துள்ளது
ஆதித்யா L1 என்ற மிசன் சூரியனை பற்றி படிக்கும் இஸ்ரோவின் முதல் மிஷன் என அழைக்கப்படுகின்றது.
உலக அளவில் நடைபெறும போட்டிகளில் மைக்ரோ மற்றும் சிறு குறுந்தொழில் அமைப்புக்கள் பங்கேற்று செயலாற்றுகின்றன.
நியூ இந்தியா ஆவணத்தை நிதி ஆயோக் தயாரித்து வெளியிட்டுள்ளது இவற்றில் நிர்வாகம், சீர்திருத்தம், தொழில் தன்மை குறித்த சமூக பங்களிப்பு பற்றி பேசுகின்றது.
அடிக்கல் நாட்டுவிழா
சமீபத்தில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் மாநிலத்தில் புதிய விமான தளத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா கொலோங்கி பகுதியில் நடைபெற்றது.
பாகிஸ்தான் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஹமீது நிஷால் வாகா பார்டர் வழியாக இந்தியா திரும்பினார். இவர் 2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரோவின் தலைநகரம் பெங்களூருவில் அமைந்துள்ளது. விக்ரம் சாராபாய் தொடங்கி வைத்தார். மேலும் இஸ்ரோ ஆகஸ்ட் 15 ஆயிரத்து 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கே .சிவன் இதன் இயக்குனராக செயல்பட்டார். .
இந்தியாவின் பாரம்பரியமிக்க பகுதிகளின் அதன் பெருமையை தொன்மை ஆகியவற்றினை அறிந்துகொள்ள பிரசாத் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
பிரசாத் திட்டமானது 2014 தொடங்கப்பட்டது தற்போது 25 மாநிலங்களை அடைந்துள்ளது.
சுற்றுலா யாத்திரை செய்பவர்களுக்கான ஒருங்கிணைந்த தரமான நிலைத்த நீடித்த வசதிகளை வழங்குவது முக்கிய பணியாகும்.
உலகப் பொருளாதார கூட்டமானது மாதம் சுவிட்சர்லாந்து நடைபெற உள்ளது.
இந்தியாவில் அதிகம் படிக்கப்பட்ட பத்திரிகைகளின் பட்டியலில் 2017 ஆம் ஆண்டிற்கான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் முதல் 10 இடங்களின் வரிசையில் தமிழ்நாட்டின் தினதந்தி பத்திரிக்கை மட்டும் முதல் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மாநிலத்தை அடுத்து திறந்த வெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாநிலமாக அருணாச்சலப்பிரதேசம் ஆகும்.
இந்தியாவில் பள்ளிகள் அளவிலான விளையாடு இந்தியா கோலோ இந்தியா என போட்டியின் ஆட்டங்கள் ஒளிப்பரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது 2018 முதம் 2022 வரை 5 ஆண்டுகளுக்கு ஒளிப்பரப்பும் உரிமை பெற்றுள்ளது.
முன்னேற்ற நடவடிக்கைகள்
பெண்களுக்கான அரசின் அனைத்து திட்டங்கள் முன்னேற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரே தளத்தில் தெரிந்து கொள்ள நாரி NARI என்னும் இணையத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த தளத்தில் பெண்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் கொண்ட 350 திட்டங்கள் தொகுப்பட்டுள்ளன. இத்தளத்தில் பெண்களுக்குத் தேவையான அடிப்படைக் குறிப்புகள் ஊட்டச்சத்துத் தகவல்கள், உடல் பரிசோதனைக்கான பரிந்துரைகள் நோய் குறித்த தகவல்களும் அடஙகியுள்ளன.
மத்திய அரசின் FAME இந்தியா திட்டத்தின் கீழ் எலக்டிரானிக் மூலம் இயங்கும் வாகனங்களை வாங்க ஒப்புதல் பெற்றுள்ளது கர்நாடக மாநிலம். FAME இந்திய மானிய திட்டத்தின் கீழ் அரசின் கனரகத் தொழிற்சாலை துறையிலிருந்து மின்னாற்றலில் இயங்கும் வாகனங்கள் வாங்க ஒப்புதல் அண்மையில் பெற்றுள்ளது.