டிஎன்பிஎஸ்சி

மொழிப்பாடத்தைக் கொண்டு போட்டி தேர்வு வெல்ல படியுங்க!

போட்டி தேர்வை வெல்ல மொழிப்பாடம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. போட்டி தேர்வை புத்திசாலித்தனமாக வெல்ல தமிழ் பாடங்களில் ஜொலிக்க வேண்டும் 95 முதல் 100க்கு, 100 கேள்விக்கும் சரியான விடை கொடுத்து தேர்வை உங்கள் வசமாக்கலாம். மொழிப்பாடத்தில் 100 கேள்விகள், மற்றும் பொது அறிவிப்பாடத்தில் 50 கேள்விளுக்கு சரியான விடை அளித்தால் போதுமானது. பொது அறிவுப்பாடத்தை பொருத்தவரை உளவியல் ரீதியில்  போட்டி தேர்வுக்கு தேவையான 50 கேள்விக்கு தேர்வர்கள்   தானாகவே விடை கொடுக்க முடியும் ஆனால் மீதமுள்ள கேள்விகளில் நம்முடைய கட் ஆஃப்கள் வேலைபெறும் வாய்ப்பினை பெற உதவியாக இருக்கும்.

சார்பெழுத்துக்கள் 10 வகை சார்ந்து வரும் உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம், ஓர் உயிரெழுத்து ஒரு மெயெழுத்தும் சேர்ந்து பிறக்கக் கூடிய எழுது உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் 216 ஆகும்.

ஃ ஆய்த எழுத்த மூன்று புள்ளிகளால் எழுதப்படும் எழுத்தாகும். ஆய்த எழுத்தினை தனி நிலை  எழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி, கேடயம், அஃகேனம், புள்ளி, ஒற்று என்று வேறு பெயர்கள் கொண்டவையாகும். 
ஆய்த எழுத்து தனக்கு முன் உயிர் குறில் எழுத்தையும் தனக்குப் பின் வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். அஃதும் இஃது, எஃகு  போன்றவை கூறலாம். 
அஃது உயிர்குறில் மற்றும் வல்லின உயிர்மெய் என்று அழைக்கப்படும். 


உயிரளபெடை: 

உயிரளபெடை மூன்று வகைப்படும். உயிர் எழுத்துக்களில் நெட்டு எழுத்துக்கள் ஏழும் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து மூன்று மாத்திரையாக நீண்டு ஒலிப்பது 
உயிரளபெடை மூன்று மாத்திரைப் பெற்று வரும். 
சொல்லின் முதல், இடை, கடை என மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுத்து ஒலிக்கும். 

உயிர் நெடில் அளபெடுக்கும் போது அதற்கு இனமான குறில் எழுத்து தோன்றும் ‘ஐ’க்கு ‘இ’ யும் ‘உ’- ம் இனமான எழுத்தாக வரும். 
ஒஓதல் வேண்டும் – முதல் 
கெடுப்பதூஉம் – இடைபடாஅ பறை- கடை

செய்யுளிசை அளபெடை , இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை 
செய்யுளில் ஓசை குறையும் போது குறைந்த அளவை ஓசை போதும் குறைந்த ஓசையை நிறைவு செய்ய அளவெடுப்பது இசைநிறை செய்யுளிசை அளபெடை ஆகும்.
கெடாஅர் , விடாஅர், தொழாஅர், உறாஅர்
செய்யுளிசை ஓசை குறையாவிட்டாலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும். 
கெடுப்பதூஉம், எடுப்பதூஉம்
செய்யுளில் ஓசை குறையாமிடத்தும் பெயரெச்ச சொல்லை வினையெச்ச சொல்லாக  மாற்றுவதற்கு அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும். 
உரனசைஇ, குடிதழிஇ, அடிதழிஇ 
செய்யுளிசை இசைநிறை அளபெடை எனிலில் ‘அ’ இன்னிசை அளபெடையில் ‘உ’ சொல்லிசை அளபெடையில் ‘இ’யும் அளபெடுக்கும். 

ஒற்றளபெடை: 

ஒற்றளபெடையில் மெல்லின எழுத்துக்கள் ஆறும், இடையின எழுத்துக்கள் நாலும் ர், ழ் தவிர ஆய்த எழுத்து ஒன்று என 17 எழுத்துக்கள் அளபெடுக்கும். 
வல்லின எழுத்துக்களான க்,ச்,ட்,த்,ப்,ற் மற்றும் இடையின எழுத்துக்களில் இரண்டும் ர், ழ் என எட்டுவகை எழுத்துக்கள் ஒற்றளபெடையில் அளப்பெடுக்காது.
 ஒற்றளபெடையில் ஒரு மாத்திரை அளவைப் பெறும்
எங்ங்னம் எடுத்துக்காட்டாக கூறலாம். 


குற்றியலுகரம்: 

குற்றிய லுகரம் என்பது  உகரமானது குறைந்து ஒலிக்கும் குறுமை+இயல்+உகரம்
குற்றியலுகரமானது தனது ஒரு மாத்திரைலிருந்து அரை மாத்திரையாக குறைந்தெலிப்பது குற்றியலுகரம்  ஆகும். 
‘உ’ என்ற எழுது தனது ஒரு மாத்திரையிலிருந்து  அரை மாத்திரையாக்க குறைந்தொலிப்பது குற்றியலுகரம் ஆகும்.  
குற்றிய லுகரத்தின் மாத்திரை அளவு அரை 1/2 மாத்திரை அளவு ஆகும். 
சொற்களின் இறுதியில் ஆறு வல்லின மெய் எழுத்துக்கள் உ கரத்துடன் சேர்ந்து வரும் பொழுது குறைந்து ஒலிக்கும். 
கு (க்+உ) சு (ச்+உ). ட்+உ  து( த்+உ) பு (ப்+உ) று(ற்+உ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *