டிப்ஸ் டிப்ஸ் கர்ப்பிணிகள் கவனத்திற்காக
கர்ப்பிணி பெண்கள் உடலையும், மனதையும் ரிலாக்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும். வீட்டிற்குள்ளேயே இருப்பதால் யோகா, தியானம் மற்றும் சில எளிதான உடற்பயிற்சிகளை அன்றாட வழக்கமாகி வைத்துக் கொள்ளலாம். தாய்மை பற்றிய புத்தகங்களைப் படித்து உங்களுக்கான வழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
சொந்த கவலைகள் மேலோங்கும் போது மகப்பேறு மருத்துவரிடம் வழக்கமான ஆலோசனை பெறுதல் போன்றவை ஆறுதலைக் கொடுக்கும். குறிப்பாக மனச்சோர்வையும், பதற்றத்தையும் உணரும் போது உளவியல் நிபுணர்களை தொடர்பு கொள்வது அவசியம். குழந்தை பிறப்பு பற்றிய ஆன்லைன் வகுப்புகள் இருக்கின்றன.
உங்கள் பயணம் பற்றி அறிந்து கொள்வதிலும், குழந்தை பிறப்பிலும், சமூக நடவடிக்கைகள் ஒரு போதும் தடையாக இருக்கக்கூடாது. இதுபற்றி ஆன்லைன் வகுப்புகள் செய்வது கர்ப்ப காலத்தில் குழந்தை மற்றும் உங்களை பராமரிப்பது பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். வைரஸ் பற்றிய வழிகாட்டுதல்கள் விதி முறைகளை தெரிந்து வைத்துக் கொண்டு நடப்பது நல்லது என்றாலும் தொற்றுநோய் பற்றிய பிற தகவல்களை அதிகம் பெற வேண்டிய அவசியம் இல்லை.
இதனால் தேவையில்லாத கவலை மற்றும் பதற்றம் அதிகரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்கள் சமூக விலகலால் சந்திக்காமல் இருப்பது வெறுப்பாக இருக்கலாம். தொலைபேசி அல்லது வீடியோகால் மூலம் எப்பொழுதும் தொடர்பில் இருங்கள். நேருக்கு நேர் சந்திக்க முடியாவிட்டாலும் உணர்வுபூர்வமாக இணைந்திருங்கள்.
7 மாதங்களுக்கு பிறகு எப்படி இவ்வாறு விரைவாக மாறி விட்டன என்று சிந்தியுங்கள். ஏற்றுக் கொள்ள முயற்சிக்கும் போது பிறக்க விருக்கும் குழந்தையை கவனிப்பதில் கவனம் சென்று விடும் என்றாலும் இதில் இருந்து ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க உதவியாக இருக்கும். அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். வெளியே செல்ல நேரிட்டால் முக கவசத்தை அணிந்து செல்ல வேண்டும்.
அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். முகத்தை தொடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே மனம் நிம்மதியாக இருக்கும். பொதுமக்களுக்கு கூறியுள்ள வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு பயணம். இந்த பயணத்தில் மாறுபட்ட உணர்ச்சிகள் கலந்திருந்தாலும் பரவிக் கொண்டிருக்கும் இந்த தொற்றால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரித்து உள்ளன. எனவே இந்த நேரத்தில் மன ஆரோக்கியம் மிக மிக அவசியமாகின்றது.