ஆன்மிகம்ஆலோசனை

Thirupugazh song 308 : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 308

அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது.

பாடல் வரிகள்

ஈனமிகுத் துளபிறவி …… யணுகாதே யானுமுனக் கடிமையென …… வகையாகஞானஅருட் டனையருளி …… வினைதீர நாணமகற் றியகருணை …… புரிவாயேதானதவத் தினின்மிகுதி …… பெறுவோனே சாரதியுத் தமிதுணைவ …… முருகோனேஆனதிருப் பதிகமரு …… ளிளையோனே ஆறுதிருப் பதியில்வளர் …… பெருமாளே.

பாடல் விளக்கம்

இழிவு மிகுந்துள்ள பிறப்பு மீண்டும் என்னை அணுகாதபடி, நானும் உனக்கு அடிமையாகும் பாக்கியத்தைப் பெற மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து, அடியேனது வினைகள் அறவே நீங்க, வள்ளியிடம் வெட்கத்தை விட்டு வலியச் சென்று ஆட்கொண்டது போல நாணத்தை நீக்கி நீயே வந்து கருணை புரிவாயாக.

அடியார்களின் தானத்திலும் தவத்திலும் மேன்மையான பகுதியைப் பெறுபவனே, சரஸ்வதி தேவியாம் உத்தமியின் சகோதரனே , முருகனே, திருஞானசம்பந்தராக வந்து பல தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்த இளம்பூரணனே,

ஆறுதி ஆறு படை வீட்டுத்
திருத்தலங்களில் வளர்கின்ற பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *