Thirupugazh 265: திருப்புகழ் பாடல் 265 குவளைக் கணை (திருக்கணிகை)
திருப்புகழ் படிக்க கிடைக்கும் பாக்கியமே மிகப்பெரும் பாக்கியமே . முருகனை அனுதினமும் துதிக்க நமக்கு கிடைத்த ஒரு அறிய வாய்ப்பை அனைவரும் தவறவிடாமல் பயன்படுத்தி முருகப்பெருமானின் அருளை முழுவதுமாக பெற்று நலமுடன் வாழ்வீர்.
பாடல் வரிகள்
குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
குடையிட் டகுறைப் …… பிறையாலே
குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்
குயிலுக் குமினித் …… தளராதே
இவளைத் துவளக் கலவிக் குநயத்
திறுகத் தழுவிப் …… புயமீதெ
இணையற் றழகிற் புனையக் கருணைக்
கினிமைத் தொடையைத் …… தரவேணும்
கவளக் கரடக் கரியெட் டலறக்
கனகக் கிரியைப் …… பொரும்வேலா
கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
கலவிக் கணயத் …… தெழுமார்பா
பவளத் தரளத் திரளக் குவைவெற்
பவையொப் புவயற் …… புறமீதே
பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
பதியிற் குமரப் …… பெருமாளே.
மேலும் படிக்க : Thirupugazh Songதிருப்புகழ் பாடல் 264 குலைத்து மயிர் (திருத்தணிகை)
.பாடல் விளக்கம்
ஐந்தாவது பாணமாகிய நீலோற்பல
மலர் அம்பைச் செலுத்திய மன்மதனுடைய முடியின் மீது குடையாக அமைத்த களங்கத்தை உடைய சந்திரனுடைய வெப்பத்தால் பழிச்சொல் பேசி நெருங்கிவரும்
மங்கையர்க்கும், இனிய குரலுடன் கூவும் குயிலுக்கும் இனிமேல்
தளராதவாறு,உன் மேல் காதல் கொண்ட இந்தப் பெண்ணை துவள்கின்ற கூடல் இன்பத்துக்கு
விரும்பி அழுத்தமாகத் தழுவி, உன் தோள்களின் மேல் விளங்கும்
இனிமையான (கடப்ப) மாலையை ஒப்புதல் இல்லாத அழகுடன்
இவள் அணிந்து கொள்ள, கருணையுடன் நீ தந்தருள வேண்டும்.
உணவு உண்டை உண்பனவும், மதம் பாயும்
சுவட்டை தாடையில் கொண்டனவுமான யானைகள் எட்டும் அலறிப் பயப்பட, பொன் மலையாகிய கிரெளஞ்சத்துடன் போர் செய்த வேலனே, அசோகமலர்க் கணையைத் தோளில்
ஏந்திய மன்மதனின் வேண்டுமென்றே அம்பெய்த செயலால் வள்ளியைத் தழுவ மனம் உருகிச் சேருதற்கு விரும்பி
எழுகின்ற மார்பனே.
மேலும் படிக்க : திருப்புகழ் 262 (குயில் ஒன்று) திருத்தணிகை பாடலும் விளக்கமும்
பவளம், முத்து இவை திரண்டுள்ள குவியல்கள்
மலை போல் கிடக்கும் வயற் புறங்களின் மேல் சங்கின் கூட்டங்கள் நிறைந்த திருத்தணிகை
என்னும் தலத்தில் (வீற்றிருக்கும்) குமரப் பெருமாளே.