திருப்புகழ் பாடல் -13 சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்)
இந்தப் பதிகத்தில் நம் அருணகிரிநாதர் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் அழகிய தேவனாம் பார்வதிதேவியின் இளைய மகனாகிய முருகப்பெருமானின் திருநாமங்களை நாம் வணங்குவதை பற்றி கூறியுள்ளார் அவரை தினமும் நினைத்து அவரது திருநாமங்களை துதித்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்வு வளம் பெறும்…
தந்தனந் தந்தத் …… தனதான
தந்தனந் தந்தத் …… தனதான
பாடல்
சந்ததம் பந்தத் …… தொடராலே
சஞ்சலந் துஞ்சித் …… திரியாதே
கந்தனென் றென்றுற் …… றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் …… றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் …… புணர்வோனே
சங்கரன் பங்கிற் …… சிவைபாலா
செந்திலங் கண்டிக் …… கதிர்வேலா
தென்பரங் குன்றிற் …… பெருமாளே.
பாடல் விளக்கவுரை
எப்பொழுதும் பாசம் என்ற
தொடர்பினாலே, துயரத்தால் சோர்ந்து திரியாமல்,
கந்தன் என அடிக்கடி
மனதார உன்னை தினமும் உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து,
யான்அன்பு கொள்வேனோ? (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொட போன்ற தேவயானையை
மணம் செய்துகொண்டு சேர்பவனே, சங்கரனின் பக்கத்தில் தங்கிய
பார்வதியின் குழந்தாய்,
திருச்செந்தூரிலும், அழகிய
கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே,
அழகிய திருப்பரங்குன்றில்
அமர்ந்த பெருமாளே.