திருப்பள்ளியெழுச்சி – 26
திருப்பள்ளி எழுச்சி பாடல் ஐம்புலன்களை ஒடுக்கி அடியவர்கள் உன்னை வணங்க வந்துள்ளனர். மணவாளனே சிவந்த தாமரை மலர்கள் கண் விழிக்க சிவபெருமான் தங்களை ஆட்கொள்ள வேண்டுவ்து ஆகும்.
பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார் பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
விளக்கம்:
ஐம்புலன்களையும் ஒடுக்கி, உன்னை உணர்கின்ற நிலையில் உள்ள உன் அடியவர்கள் பந்தமாகிய கட்டுக்களை அறுத்தவர்களாக உன்னைத் வணங்க வந்துள்ளனர். அவர்கள் பலரும் மையணிந்த பெண்களைப்போல் தங்களைக் கருதி உன்னை வணங்குகின்றனர்.
உமையாகிய பெண்ணின் மணவாளனே! சிவந்த தாமரை மலர்கள், கண் விழிப்பது போன்று தங்கள் இதழ்களை விரிக்கின்ற குளிர்ந்த வயல்களை உடைய திருப்பெருந்துறைச் சிவபெருமானே! எங்கள் பிறப்பினை அறுத்து எம்மை ஆட்கொண்டருளும் சிவபெருமானே! பள்ளி எழுந்தருள்க! என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.