மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் கொள்ளை.. காவல் துறை தீவிர விசாரணை.
ராமநாதபுரம் யானைக்கால் வீதியில் வசித்து வருபவர் வீட்டில் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இவர் மசாலா ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற உறவினர் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். சுப நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டதை கண்டு பதறிப்போன அவர்.
- சுப நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டது
- காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு வீட்டினுள் சென்று பார்த்தார்.
- கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து, தீவிர விசாரண.
ராமநாதபுரம் யானைக்கால் வீதி
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு வீட்டினுள் சென்று பார்த்தார். ராமநாதபுரத்தில் மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் தடயத்தை மறைத்த, மிளகாய் பொடி தூவி, 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் சென்ற வழித்தடத்தை
அங்கு வந்த பஜார் காவல் துறையினர் உடனடியாக மோப்பநாய் ஜூலி உதவியுடன் கொள்ளையர்கள் சென்ற வழித்தடத்தை ஆராய்ந்துள்ளனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பீரோ மற்றும் கதவுகளில் உள்ள தடயங்களை ஆய்வு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மர்ம நபர்கள் கொள்ளை
விசாரணையில் ஏஜென்சி மூலம் வசூல் செய்து வைத்திருந்த ஒரு லட்சம் 80 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, உள்ளிட்ட 3 கிலோ எடையுள்ள பூஜை பொருட்கள் மற்றும் 12 கிராம் தங்கத்தையும், மர்ம நபர்கள் கொள்ளையடித்து தடயத்தை மறைக்க மிளகாய் பொடியை தூவி சென்றது தெரிய வந்துள்ளன.