செய்திகள்தேசியம்ராணுவம்

இருநாடுகளுக்கும் இடையேயான உறவு தந்திரமான செயல்களில் ஈடுபடுவது..!!

ஷியோகில் ஒரு பாலம் அமைக்கும் பணியை கைவிட்ட சீன துருப்புகள் பின் வாங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தது. எல்லையை நீர் மற்றும் இந்திய பிரதேசத்தில் ஊடுருவது போன்ற தந்திரமான செயல்களில் ஈடுபடுவது இருநாடுகளுக்கும் இடையேயான உறவை விரிசலுக்கு வழிவகுக்கும் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

கள எதார்த்தம் கிழக்கில் லடாக்கில் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வந்தது. மேலும் சீனப் படை வீரர்கள் ஒப்பந்தத்தை எவ்வாறு பின்பற்றுகிறது என்பதை பற்றி இந்தியா பார்த்து வருகிறது.

உண்மையான கட்டுப்பாட்டுப் பகுதியில் தனது உரிமை மற்றும் நலன்களை இந்தியா எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காது என்ற எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியது.

மே மாத தொடக்கத்தில் சீன ராணுவத்தின் படைக்குறைப்பு தொடங்கிய பின்னர் முதல் தடவையாக உண்மையான கட்டுப்பாட்டு கோடு எல்ஐசி பகுதியில் சீனாவின் படைப்பை இந்தியா அதிகார பூர்வமாக ஒப்புக் கொண்டது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்த சீன படைகளின் நடத்தை பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் முற்றிலும் புறக்கணிப்பதாக உள்ளது என்று கடுமையான எச்சரிக்கைகளை தெரிவித்தார்.

அண்மையில் வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களை சீனா படைகளை குவிப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதை அடுத்து கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் படைகளை விலக்கிக் கொள்ளும் புரிந்துணர்வை செயல்படுத்த தவறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று இந்தியா சீனாவை கடுமையாக எச்சரித்திருந்தது.

கிழக்கு நாட்டில் உள்ள பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் தங்களுக்கே உரியதாக சொந்தம் கொண்டாடிய சீனாவை கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா சீனாவின் அத்து மீறல்களை கண்டித்து அண்மையில் கூடாரம் அமைத்து சீன ராணுவ வீரர்களை இந்தியா வீரர்கள் சண்டை போட்டனர்.

இந்த மோதல்களில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை வெளியிட சீனா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *