நாம் அறக்கட்டளை நதியாவை கொண்டு எடுத்த போட்டோஷூட்
ஸரினா அனுஷா மோய்டு என்ற இயற்பெயர் கொண்ட நடிகை நதியா. 1984 நோக்கேததூரத்து கண்ணம் நாட்டு என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாகி அதன் தமிழாக்கத்தில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி முன்னணிக் கதாநாயகியாக கலக்கியவர் நதியா. 1994 வரை 10 ஆண்டுகாலம் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து பின் ஓர் இடைவேளை விட்டார்.
2004ல் துணை நடிகராக திரை உலகுக்கு திரும்பினாள். எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக களம் இறங்கிய நதியாவுக்கு பெரிய வரவேற்பு அளித்தனர் மக்கள்.
“நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே”
இளம் வயதினர் தன்னுடைய அம்மாவுடன் இந்தப் பாடலைப் பாடாத அவர்கள் எவரும் உண்டோ?
வயசானாலும் உன் ஸ்டைலும் கெத்தும் மாறல அப்படின்னு நம்ம படைப்பா டயலாக் போல நதியா இன்னும் இளமையா இருக்காங்க. இருந்தாலும் தற்போது துணை நடிகராக திரையுலகில் வலம் வருகிறார்.
போட்டோ ஷூட்
சுஹாசினி மணிரத்னம் நாம் அறக்கட்டளையிற்காக ஒரு அருமையான கான்செப்ட் செய்துள்ளார். ஸ்ரீ ராஜா ரவிவர்மன் அவர்களின் ஓவியத்தை போல் ஒருவருக்கு அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
புடவை கட்டிக் கொண்டு ஒரு பெண் அமர்ந்திருக்கும் ஓவியத்தை நதியாவை கொண்டு இவர்கள் போட்டோ ஷூட் செய்துள்ளனர். அந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இவ்வாறு தான் இருக்குமோ என்று அனைவரும் வியக்கும் வண்ணம் இந்த போட்டோ ஷூட் அருமையாக வந்துள்ளது.
நதியா தன்னுடைய தற்போதைய போட்டோஷூட் புகைப்படத்துடன் ஸ்ரீ ராஜா ரவிவர்மாவின் ஓவியத்தையும் இணைத்தார் போல் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அந்தக் கால ஆடை அணிகலன்கள் உடன் ரெடியாக இருந்த நதியா தன்னுடைய புதிய கண்ணாடியுடன் புதுவிதமான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் இல்லாமல் போய்விட்டால் நாட்டில் என்ன நடக்கிறது என்பது அறியாமல் போய்விடும் போலிருக்கிறது!