உஷார் மக்களே நாளை சூரிய கிரகணம்
உஷார் மக்களே நாளை சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் வரும் 21 ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்கிறது. சூரிய கிரகணத்தின் விளக்கத்தை எளிதாக சொல்வோமாயின் சூரியன் மறைந்து நிலவின் நிழல் பூமியில் விழுவது சூரியகிரகணம். இதற்குப் பின்னால் இருக்கும் சாஸ்திர விளக்கமும் அறிவியல் விளக்கமும் காண்போம்.
சாஸ்திரம்
சாஸ்திரத்தின்படி ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய கிரகணம் வருவதும் திங்கட்கிழமை அன்று சந்திர கிரகணம் வருவதும் சூடாமணி கிரகணம் என்று விசேஷமாக சொல்லப்படுகிறது.
இந்து சமயத்தின் படி சூரியபகவானை பாம்பு தலை கொண்ட ராகு பகவான் உண்பதால் சூரியனின் ஒளி மங்கி காணப்படுவதே சூரிய கிரகணம்.
ஜோதிடத்தில் ராகு கேதுவை சாயா கிரகம் எனக் குறிப்பிடுவர். சாயா என்ற சொல்லிற்கு நிழல் என்று பொருள் கொடுக்கும்.
இதனை கட்டுக் கதையாக பலர் கருதுகின்றனர். ஆனால் சாஸ்திரம் சொல்லும் வார்த்தைகளுக்கு பொருள் புரியாமல் இதனை கட்டுக் கதையாக நம்புகின்றனர். இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் நிகழ்வை காணலாம்.
அறிவியல்
ஒளியின் இருப்பிடமாக இருக்கும் சூரிய பகவான் மையத்தில் இருக்க பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிவரும். அதுமட்டுமல்லாமல் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும்.
அதேபோல் நிலாவும் பூமியை மையமாகக் கொண்டு அதனுடைய சுற்றுவட்டப் பாதையில் பூமியைச் சுற்றிவரும். அவ்வாறு இருக்க சூரியனின் ஒளி நிலவின் மீது முழுமையாக படுவதே பௌர்ணமி.
சூரியன் சந்திரன் பூமி என மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் அமைந்து நிலா இல்லாத இரவாக அமைவதே அமாவாசையாக நிகழ வருடத்தில் ஒரு அம்மாவாசையன்று சூரியனின் ஒளி முழுமையாக சந்திரனால் மறைக்கப்பட நிலவின் நிழல் பூமியில் மேல் விழுவதே சூரிய கிரகணம் ஆகிறது.
சாஸ்திரத்தின் படி ராகுவும் கேதுவும் கிரகமாக கருதப்படாமல் நிழலாகவே கருதப்படுகிறது. அந்த நிழல்தான் சூரியனை மறைத்து சூரிய கிரகணமாக நாம் பார்க்கிறோம்.
வகைகள்
சூரிய கிரகணம் நிகழும்போது பூமியின் எல்லாப் பகுதிகளிலும் முழுமையாக தென்படாது. சூரிய கிரகணம் காட்சியளிக்கும் பொருத்து அது வகைப்படுத்தப்படுகிறது.
1. முழுமையான சூரிய கிரகணம்- நிலவின் கருநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது.இந்நிகழ்வின் போது கதிரவ தகடு முழுமையாக மறைக்கப்படும்.
2. வளையக் சூரிய கிரகணம்- நிலவின் எதிர்நிழல் பூமியின் மீீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவ தகட்டின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும்.
3. கலப்பு சூரிய கிரகணம்- பூமியின் பகுதிக்கு ஏற்றவாறு முழுமையான சூரிய கிரகணமாகவோ வளைய சூரிய கிரகணமாகவோ ஆகும் காட்சி அளிக்கலாம். ஆனால் இவ்வகை அரிது.
4. பகுதி சூரிய கிரகணம்- நிலவின் புறநிழல் பூமியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவ தகட்டின் ஒரு பகுதி மறைக்கப்படும்.
கிரகண நேரம்
சாஸ்திரத்தின்படி நாம் பின்பற்ற வேண்டிய கால நேரம். பாரதத்தில் கிரகணம் ஆரம்பமாகும் நேரம் 10.22 A. M. கிரகணம் மத்திய காலம் 11.59 A. M. கிரகணம் முடியும் நேரம் 01.42 P. M.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை
முதல் நாள் அதாவது சனிக்கிழமை 20 ஜூன் 2020 அன்று இரவு 10 மணிக்குள் போஜனம் முடித்துக்கொள்ள வேண்டும். கிரகண பாதிப்பு அடையாமல் இருக்க உணவுப் பொருட்களுக்கு தர்பை இட்டு வைப்பது நல்லது. காலையில் எழுந்தவுடன் நீராகாரம் எடுத்துக்கொள்ளலாம். கிரகணம் ஆரம்பித்த பிறகு தண்ணீர்கூட அருந்தக்கூடாது. மதியம் 01.42 P. M. மணிக்கு கிரகணம் முடிந்த பிறகு குளித்து சமைத்து உணவு உட்கொள்ள வேண்டும்.
கிரகண காலத்தில் பூஜையின் பலன்
கிரகணம் ஆரம்பித்த பிறகு தலைக்கு குளித்துவிட்டு நமக்கு அறிந்த ஸ்லோகங்கள் ஜபா தியானங்கள் செய்வது நல்லது. சாதாரண பொழுதில் பூஜை புனஸ்காரங்களுக்கு இருக்கும் பலன்களைத் தாண்டி கிரகண நேரத்தில் பல மடங்கு பயன் அளிக்க வல்லது.
சாதாரண கிரகணத்திற்கு இருக்கும் பலன் உதாரணத்துக்கு கோடியாக இருந்தால் சூடாமணி கிரகணத்திற்கு கோடி கோடியான பலன்கள்.
சாஸ்திரங்கள் அறியப்படாத வரை கடைப் பிடிக்காமல் இருப்பது தவறல்ல அறிந்த பிறகு கடைப் பிடிக்காமல் இருப்பது தவறு. அறிந்ததை செய்து பழகுங்கள். இந்த விசேஷமான சூடாமணி சூரிய கிரகணத்தை கடைப்பிடிப்போம்.