Thamizhum Sarasvathium serial update:வெளிவந்த அர்ஜுனின் ஆட்டம்: அர்ஜுனை விட்டுப் பிரியும் ராகினி
நமது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த நாடகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 6 மணி ஆனாலே நம்ம சரஸ்வதியும் தமிழும் வரப் போறாங்க அவங்கள பாக்கணும்னு அவசர அவசரமா வேலையை முடிச்சிட்டு அந்த நாடகத்தை பார்க்கிற பல ரசிகர்கள் இருக்காங்க. . இந்த நாடகத்தில் காதல், கஷ்டம் ,கம்பீரம், எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் ஒரு நேரத்தில் தொடக்க நிலைக்கு வருவான் என்பதை உணர்த்தும் விதமாக பல குடும்பங்களின் கதைகளை எதார்த்தமாக நமக்கு வெளிப்படுத்தும் ஒரு நாடகமாக தமிழும் சரஸ்வதியும் உள்ளது.

அர்ஜுன் வில்லத்தனம்
இந்த நாடகத்தில் நண்பனாக வந்து கடைசியில் அந்த குடும்பத்தை பழிவாங்கி அவர்களை நடு ரோட்டிற்கு அனுப்பி வைத்து ஆனந்தமாக இருப்பவர் நம்ம அர்ஜுன். என்னதான் அவங்கள வெளியில் அனுப்பினாலும் அவங்க எல்லாரும் கண்டிப்பா மகிழ்ச்சியா தான் இருக்காங்க. அதை தெரிஞ்சுகிட்ட நம்ம அர்ஜுன் எப்படியாவது அவங்களை பழி வாங்கணும் அவங்க கண்டிப்பா சந்தோஷமா இருக்க கூடாது என நினைத்து பல வில்லத்தனத்தை செய்தார்.

இந்நிலையில் கடைசியாக அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமாக இப்பொழுது இருப்பது சரஸ்வதி கர்ப்பமாக இருப்பது தான். அந்த ஆணிவேரை அறுத்துவிட்டால் அவர்கள் நிலைகுலைந்து போய்விடுவார்கள் என்பதை உணர்ந்த அர்ஜுன் சரஸ்வதியும் தமிழும் சென்றபோது வேறு ஒரு ஆளை வைத்து எதார்த்தமாக விபத்து நடப்பது போல ஒரு செட்டப்பை செய்தார். இந்த விபத்தில் சரஸ்வதி கீழே விழுந்து மயங்கி விட்டார்.
மேலும் படிக்க : Bakiyalaxhmi Update :சீரியலுக்கு எண்ட்ரி கொடுக்கும் சித்தா நடிகர் இனி இவர்தான் இணியாவிற்கு ஜோடியா?

அர்ஜுனை வெளுத்து வாங்கிய ராகினி
அர்ஜுன் செய்த வில்லத்தனத்தால் சரஸ்வதி குழந்தைக்கு என்ன ஆகும் என அனைவரும் பயந்து இருந்தனர். ஆனால் நல்ல வேலையாக எதுவும் நடக்காமல் சரஸ்வதியும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். இந்த விஷயத்தை கேட்ட ராகினி மிகவும் சந்தோஷப்பட்டு அர்ஜுனிடம் இதனை கூறும்பொழுது அர்ஜுனனின் முகம் அப்படியே பற்றி எரிந்தது. ஏதோ பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல அர்ஜுனனின் முகத்தை பார்த்து ராகினிக்கு சந்தேகம் வந்துவிட்டது.

ராகினி அர்ஜுனை வெளுத்து வாங்கும் விதமாக நீங்க ஏன் இப்ப எப்படி இருக்கீங்க அண்ணி சரியானது உங்களுக்கு சந்தோஷம் இல்லையா உண்மையாவே அப்ப உங்களுக்கும் இந்த விபத்துக்கும் சம்பந்தம் இருக்கா நீங்க தான் இத பண்ணீங்களா என்று அர்ஜுன ஒரு வழி பண்ணிட்டாங்க. அர்ஜுன் என்ன சொல்றது அப்படின்னு தெரியாம முழிச்சிட்டு இருக்காரு. இத்தனை நாள்ல ராகினி பண்ண ஒரே ஒரு உருப்படியான விஷயம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : எதிர்நீச்சலில் அடுத்த ஆதிகுணசேகரன் இவர் தான்; வந்துட்டாருயா வந்துட்டாரு