சினிமாசினிமா பாடல்கள்

வாரிசு பட ஆராரிஆராரோ பாடல் வரிகள்

நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் ஆராரி ஆராரோ பாடல் வரிகள் இங்கு இணைத்துள்ளோம். வாரிசு படத்தில் அம்மா தாலாட்டு பாடல் பாடகி சித்ரா அவர்களால் பாடப்பட்டுள்ளது. துள்ளல் மிகுந்த பாடல் வாரிசுப் படத்தில் இருப்பதுபோல் தாய்மை அன்பு பாடல் சித்ரா பாடியிருக்க தமன் இசையில் , விவேக் எழுதி அமைந்துள்ள பாடல் சிறப்பாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

பெண் : அ.. ஆஆ.. அ.. ஆஆ..

பெண் : ஆராரிஆராரோ கேட்குதம்மா
நேரில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா

பெண் : பிள்ளை வாசத்தில் ஆசைகள்
தோரணம் சூடுதம்மா
நெஞ்சம் ஆனந்த மேகத்தில்
ஊஞ்சலும் ஆடுதம்மா

பெண் : என் உயிரில் இருந்து
பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும்
இதய துடிப்பும்
மீண்டும் இங்கே

பெண் மற்றும் குழு :
இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்று விடுமா

பெண் மற்றும் குழு :
என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கி விடுமா

பெண் : அ… ஆஆ… அ… ஆஆ..

பெண் மற்றும் குழு :
பால் முகம் கானவே
நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்டதேன்
ஆரோ!
கால் தடம் வீழவே
நான் துடித்தேன்
உனை தாய் மடி ஏந்துதே
தாலோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *