Vijay Leo public review: லியோ படம் எப்படி இருக்கு; கதை என்ன? பொதுமக்களின் முதல் நாள் விமர்சனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் திரையரங்குகளில வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது . முதல் நாளே 100 கோடி வசூலை எட்டி உள்ளது. லியோ படம் கண்டிப்பாக பிளாக் பாஸ்டர் திரைப்படமாக விஜய்க்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் சத், கௌதம் வாசுதேவ் மேனன்,மன்சூர் அலிகான் , மிஷ்கின், மேத்யூ தாமஸ் என பலரும் நடித்துள்ளனர்.

லியோ படத்தின் கதை என்ன?
லியோ படத்தில் விஜய் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் காஷ்மீரில் வசித்து வருகிறார். அங்கு விலங்குகள் வன ஆர்வலர் மற்றும் தனியாக காபி ஷாப் பிசினஸ் என குடும்பத்துடன் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழும் பார்த்திபன் எனும் கேரக்டரில் விஜய் நடித்துள்ளார். இவ்வாறாக இருக்க தனது குடும்பத்திற்கு என்று ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் கொலை வெறி பிடித்த ஆளாக மாறி அவர்களை தாக்கும் நபராக இருக்கிறார். இந்த நிலையில் ஒரு கும்பல் தனது குடும்பத்திடம் பிரச்சனை செய்ய அவர்களை சரமாரியாக தாக்கும் சம்பவத்தால் இந்தியா முழுவதும் பிரபலமாகிறார்.

இந்த பிரபலத்தால் பார்த்திபன் போட்டோவை பார்த்து ஆண்டனி தாஸ் எனும் வில்லனாக நடிக்கும் சஞ்சய் சத் பார்த்திபனை லியோ தாஸ் என நினைத்து அவரை பிடிப்பதற்காக தேடி காஷ்மீருக்கு வருகிறார். இவர்களுக்கு இடையில் வரும் சண்டை ,அதிலிருந்து தனது குடும்பத்தை எவ்வாறு காப்பாத்த போகிறார் இவ்வாறான ஒரு கதையாக லியோ படம் உள்ளது.
லியோ படம் எப்படி இருக்கு; மக்கள் கருத்து
லியோ படம் டென்ஷன், ஆக்க்ஷன், எமோஷன் என அனைத்தும் சரியாக பொருந்திய திரைப்படமாக உள்ளது. இப்படத்தின் கதைக்களம் சற்று எளிமையானதாக இருந்தாலும் விஜய் தனது முழு திறமையை காட்டி படம் முழுவதும் மாஸ் காட்டும் ஹீரோவாக நடித்துள்ளார். இதுவே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தரும். பல வருடங்கள் கழித்து எவர்கிரீன் ஜோடியாக உள்ள திரிஷா விஜய் இப்படத்தில் மீண்டும் வந்துள்ளனர் என்பதற்காகவே ரசிகர்கள் பலரும் இப்படத்தை ஆவலுடன் பார்க்க வந்தனர்.

ஆனால் அவர்களுக்கான ரொமான்ஸ் இன்னும் சற்று அதிகமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். மேலும் சொல்ல வந்த கருத்தை விரைவாக கூறி வில்லனுக்கும் ஹீரோவுக்கும் இடையேயான சண்டையை இன்னும் சற்று அழுத்தமாக வைத்திருந்தால் செம ஹிட்டான திரைப்படமாக இருந்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்பும் அவர்கள் நினைத்தபடி இருந்திருக்கும்.