4-வது முறையாக இரட்டை வேடத்தில் விஜய்…வெளியானது புதிய அப்டேட்..
நடிகர் விஜயின் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறக்கும் நடிகராக தளபதி விஜய் இருந்து வருகிறார். அவர் மீது சொகுசு கார் இறக்குமதி உள்ளிட்ட சர்ச்சைகள் அவ்வப்போது பேசப்பட்டாலும், அவரது படங்கள் தொடர்ந்து வெற்றியை தேடி தந்தன.
அந்த வகையில் பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியாவை மறைமுகமாக தாக்கியதாக கூறப்பட்ட மெர்சல் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை தேடி தந்தன. இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
‘அழகிய தமிழ் மகன்’, ‘கத்தி’, ‘பிகில்’ படங்களுக்குப் பிறகு விஜய் நான்காவது முறையாக இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்சியில் உள்ளனர். மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க : வா ரே வா ஃப்ரெண்ட்ஷிப் அடுத்த அப்டேட்
தளபதி 66′ படத்தின் கதாநாயகி மற்றும் இதர நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது, மேலும் டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் இப்படத்தின் மூலம் கோலிவுட் என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும், பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : என்ன தவம் செய்தனை யசோதா!