தேர்தல் நேரத்தில் நம் தலைவி
கங்கனா ரனாவத் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி தமிழ்நாட்டின் அரசியல் அம்மா ஜெ. ஜெயலலிதா அவர்களின் சரித்திரப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தலைவி
23 மார்ச் 2020 தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படத்தின் கதாநாயகி கங்கனா ரனாவத் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.
‘தலைவி படம் இப்போது என் வாழ்க்கையின் முக்கியமன பங்கினை வகிக்கிறது. விஜயேந்திர சார் என்னை பரிந்துரைக்கவில்லை என்றால் இந்த பயணம் தொடங்கப்பட்டிருக்காது. முதல் முறையாக, நான் ஒரு பாத்திரத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளேன். வழக்கமாக, படங்களில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு மட்டுமே நான் பரிந்துரைக்கப்பட்டுள்ளேன். எனவே, முதல் முறையாக, ஒரு மனிதன் என்னை ஒரு படத்திற்கு பரிந்துரைத்துள்ளான். ஆனால் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்வது குறித்து நான் மிகவும் பயந்தேன். ஏனென்றால் தமிழ்நாட்டு அரசியல் தெரியாது அதுமட்டுமல்ல திரையுலகத்தை பற்றியும் எனக்குத் தெரியாது.
மேலும் படிக்க : அரண்மனை படம் பாடல் பெட்ரோமாக்ஸ் லைட்டே…
நான் அவரிடம் என்னை பரிந்துரைக்க காரணத்தை கேட்டதற்கு ‘நீ இப்படத்தை நடி’ என்று மட்டுமே கூறினார். ஆனால் நான் மிகவும் பயந்தேன். இப்பாத்திரத்திற்கான என்னுடைய நடிப்பு ஒரு பெரிய பேரழிவாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் விஜயேந்திர சார் என் மேல் கொண்ட நம்பிக்கையால் தைரியமாக நடிக்க தொடங்கினேன்.’
அம்மாவின் கதாபாத்திரத்தை ஏற்று கங்கனா ரனாவத் அந்த கதாபாத்திரத்திற்காக 20 கிலோ ஏறி உள்ளார்.
தலைவன்
புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலகில் அன்றும் இன்றும் என்றும் மனதைக் கொள்ளும் வைட் பாய் அரவிந்த்சாமி நடித்துள்ளார். புரட்சித்தலைவரின் ரசிகர்களுக்கு அவரின் தலைவர் மீண்டும் வந்ததுள்ளதாக மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
ட்ரெய்லர்
மூன்று நிமிட ட்ரெய்லர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. மூன்று மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் அரசியலுக்கு வந்து பல சவால்களையும் அவமானங்களையும் சந்தித்தும் தன்னுடைய விடாமுயற்சியால் முதலமைச்சர் எனும் விஸ்வரூப வெற்றி அடைந்துள்ள பயணத்தை படம் பிடித்துள்ளார் ஏ. எல். விஜய்.
படக்குழு
பாகுபலி படத்தின் திரைக்கதை எழுத்தாளர் கே வி விஜயேந்திர பிரசாத் மற்றும் மதன் கார்க்கி இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளனர். தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் முதன்மையான இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இப்படத்தை இசையமைத்துள்ளார். ஜி ஸ்டுடியோஸ் இப்படத்தின் முதன்மை தயாரிப்பாளர்.
மேலும் படிக்க : நம்ம முத்தழகா இவங்க! பிரியாமணியின் போட்டோஷூட்
ரிலீஸ்
அம்மாவின் சரித்திரம் இரண்டாவது முறையாக படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான ட்ரெய்லர் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றதோடு படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் தூண்டியுள்ளது. 23 ஏப்ரல் 2011 படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.